Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
சஞ்சிதமும் ஆகாமியமும் “
சஞ்சிதமும் ஆகாமியமும் “
திருவடி தவத்தின் பயனால் ஒரு ஆன்ம சாதகன் தன் சஞ்சிதம் கர்மாவை கரைப்பானானாகில் , அவன் ஆகாமியம் அதிகம் சேர்க்காமல் பார்த்துக்கொள்வது உத்தமம்
எப்படி ஆற்றுவது ??
இதை கூறியவுடன் , பாண்டி ஆசிரமத்தில் இருந்து ஒருவர் ஐயா நான் செய்தேன் என்ற தன்முனைப்பு ஒழிந்து ஆற்றில் , வினை சேராது
மற்ற நண்பரும் இந்த கருத்தை தெரிவித்தார் – சாட்சி பாவனையாக நிற்கில் , ஆகாமியம் சேராது
இது ஆகிய காரியமா ??
நாம் சில வினாடிகளுக்கு தான் முழு விழிப்புணர்வுடனே இருக்க முடியும்
பின் மனம் வந்து தடுத்துவிடும்
அசையா நிலை தான் பாவனா நிலை
நாம் அசைந்தபடியே தான் இருக்கோம்
நாம் அசையா விளங்கும் ஆன்மா நிலைக்கு ஏறினால் தான் இந்த பாவனா நிலைக்கு வர முடியும்
ஏனெனில் ஆன்மா தான் அசையாமல் சாட்சியாக பார்த்து கவனித்துக்கொண்டே இருக்கு
மேலும் இதுக்கு ஒரு வழி புராணமாக கூறியிருக்கார் நம் ரிஷிகள் ஞானியர்
அது தான் பகீரதன் புராணம் – ஆகாய கங்கை
இதையும் , சாதனத்தில் எலும்பை சம்பந்தப்படுத்தினால் , இதன் ரகசியம் அவிழ்ந்துவிடும்
ஆகாமிய கர்மம் சேராமலே சஞ்சிதம் மட்டும் கரைந்த படி இருக்கும்
எல்லாவத்துக்கும் நம் ரிஷிகள் ஞானியர் வழி துறை முறை கண்டுபிடித்துளார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.