Monday, March 2, 2026

அருட்பா - அபெஜோதி அட்டகம்

அருட்பா - அபெஜோதி அட்டகம் அபெஜோதி பெருமை கண்முதல் பொறியால் மனமுதல் கரணக் கருவினால் பகுதியின் கருவால் எண்முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால் விண்முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவ தரிதென உணர்ந்தோர் அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே. விளக்கம் : அதாவது ஆர் அபெஜோதி காண்பார் என்ற கேள்விக்கு பதில் ஆரால் எதனால் காணமுடியும் ? காண முடியாது என்று பதில் அளிக்கின்றார் ஐம்புலன்களாலும் அந்தக்கரணங்களாலும் ஜீவனாலும் எண் குணம் பொருந்திய ஆன்மாவினாலும் பர – பரம்பர – பராபர வெளி உணர்வாலும் உணர்வது அரிதாகும் பின் எதனால் தான் அடையக்கூடும் ?? எனில் அருளினால் தான் சாத்தியம் ஆகும் என்று அறிய வேண்டும் அதனால் தான் அகவலில் அருள் அதன் வல்லபம் பத்தி அத்தனை வரிகள் பாடி பெருமை படுத்தி உள்ளார் ஆகையால் தவம் செய்து புண்ணியம் செய்து அருள் பெற்று அதன் மூலம் பெறற்கரிய நிலை அடையணும் அருள் அருள் அருள் – இது தான் ஒன்றே வழி துறை அபெஜோதி சும்மா கிடைப்பது இல்ல - சோறு போட்டே அடைந்துவிடலாம் என்ற கனவில் கருத்தில் இருக்கும் உலகத்துக்கு சொல்லிக்கொள்வது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.