Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
ஞானியரும் சாமானியரும் “
ஞானியரும் சாமானியரும் “
மனிதர் சதா அசைந்து அசைந்து
சொற்பமே சம்பாத்தியம் பண்ணுகிறார்
இது உடல் உழைப்புக்கு சமானம்
ஆனால்
ஞானியோ அசையாமலே நிலைத்து நின்று
எல்லாவற்றையுமே அடைகிறார்
இது அறிவை பயன்படுத்தி சம்பாத்தியம் செய்வது மாதிரி
கோடியாக கோடியாக கொட்டுவது
வள்ளல் பெருமான் :
1 ஆடாதீர் சற்றும் அசையாதீர்
2 ஆன்மா அசையாமல் ஆடாமல் நிற்பது
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய அருள்விளக்க மாலை.
திருவருட்பா ஆறாம் திருமுறை
அறையாத மிகுபெருங்காற்று அடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்ட பகிரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
3 இத்தகைய ஆன்மா உதவி கிடைத்தால் , நமக்கு வேண்டுவது ஏதுமிலை
சித்தி வளாகத்தில் வள்ளலார் உரைத்தது
“ எல்லார்க்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்த்ர்களால் செயப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் –
இந்த இடம் – இது ஆண்டவர் கட்டளை “
இடம் : சித்தி வளாகம் – ஆன்ம நிலையம்
சாதனத்தில் தவத்தில் நல்ல நிலைக்கு அனுபவத்துக்கு வந்துவிட்டனுக்கு பர உதவிகள் மிக மிக அதிகமாக இருக்கும்
அவர் எதிர்பாராதது எலாம் நடக்கும்
இது அசைதலுக்கும் அசைவின்மைக்கும் இருக்கும் வித்தியாசம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.