Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
நந்தி – சன்மார்க்க விளக்கம்
நந்தி – சன்மார்க்க விளக்கம்
BG Venkatesh / July 22, 2015
” நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே ” – திருமந்திரம்
நிறைய திருமந்திரப் பாடல்களில் இந்த நந்தி பற்றிய
குறிப்பு இடம் பெற்றிருக்கும்
1. அருள் செய்தான் நந்தி – இவ்வாறு நிறைய பாடல்கள் இருக்கும்
நந்தி என்பது என்ன ??
நந்தி – நம் + தீ
நம் கண்மணியில் கலந்திருக்கும் திருவடிகள்
நாம் நம் சாதனா பயிற்சியில் என்ன செய்கின்றோம் ??
தியானம் – தவம் செய்யும் போது நம் போதத்தை முன்னிறுத்தி – முன்னிட்டு செய்கின்றோம் – அதனால் தவறான பாதைகளில் சென்று நேரமும் உழைப்பும் சத்தியும் வீணாகி விடுகின்றது என்பது உண்மை
அது எப்படி எனில் – நான் மனதை அடக்குகின்றேன் – தத்துவங்களை கடக்கின்றேன் என்றெல்லாம் கற்பனை செய்து தவறான முறையில் செய்கின்றோம் – அதனால் பயிற்சியில் ஒருவித முன்னேற்றமும் காண்பதில்லை – எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விடுகின்றது
அப்போது என்ன செய்து சரியான பாதையில் செல்வது ??
திருவடியைப் பற்றுவது – திருவடியைப் பற்றி சும்மா இருப்பது – இது தான் செய்ய வேண்டும்
இதனை வெற்றி கரமாக செய்து விட்டால் – அவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது நிச்சயம்
எப்படி எனில் – பற்றிய திருவடிகள் , ஒரு சாதகனை மேலே அழைத்து சென்றுவிடும் – திருச்சிற்றம்பலத்திற்குள் சேர்த்துவிடும் = திருவடியுடன் கலக்க வைத்து விடும் – சிவத்துடன் கலக்க வைத்துவிடும்
நாம் சாதனையில் சும்மா இருக்க பழக வேண்டும் – அச்சமயத்தில் எல்லாம் தானாகவே நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் – நம் முயற்சி இன்றி எல்லாம் நடக்க வேண்டும்
ஆனால் இது சாதாரணமாக நடக்கக் கூடியது அல்ல – நீண்ட காலப் பயிற்சியும் முயற்சியும் அவசியம் ஆகின்றது
எப்படி ஒரு குரங்கு குட்டி தன் தாயைப் பற்றி செல்கின்றதோ – அவ்வாறு நாம் திருவடியாகிய நந்தியைப் பற்றி நின்றால் – எல்லாப் பேறுகளும் – முத்தேக சித்தி – மரணமிலாப் பெருவாழ்வு – திருச்சிற்றம்பலப் பிரவேசம் – 647 கோடி வகை ஞான சித்திகள் கைவல்லியம் என எல்லாம் கைகூடும்
இந்த அரிய சூட்சுமத்தைத் தான் ” சும்மா இரு சும்மா இரு ” என்று சொல்லி வைத்தனர்
இந்த சும்மா இரு என்பதை சீன ஞானியான் Lao Tzu ” WU – WEI ” என்று அழைக்கின்றார் – நாம் சும்மா இருந்தால் , எல்லாம் தானாகவே நடக்கும் என்று பொருள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.