Monday, March 2, 2026

திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம் களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே 114 விளக்கம் : ஜீவனிடத்து செயற்கை மலம் – மாயை கன்மம் ஜீவனுக்கு மும்மலம் ஆன்மாவிடத்து இயற்கை மலம் – ஆணவம் ஆன்மாவுக்கு ஒரு மலம் மட்டும் இது தான் செம்பிடத்து களிம்பு மாதிரியாக இது நம் சாதனா முயற்சியால் கழிவது அல்ல அருளினால் மட்டுமே கழியும் திறம் கொண்டது முக்கண் உடைய சிவம் அருளினால் என் ஆன்மாவிடம் பொருந்தி இருந்த ஆணவ மலத்தை அறுத்தான் அது மீண்டும் வந்து சேராதவாறு பொன்னொளி என் மீது வீசச் செய்து , மலம் நீங்கி சுத்தம் ஆன்மா வெண்ணிற ஒத்து நிற்க , அதில் அருள் ஒளியாகிய பவள ஒளியை வீசச் செய்தது அபெஜோதி சுத்த சிவம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.