Monday, March 2, 2026

மறு பிறவி இரகசியம் “

மறு பிறவி இரகசியம் “ இது தேவ ரகசியம் என்பர் உண்மை தான் ஆரும் அறிந்திடா ரகசியம் ஆனால் ஒரு வருட காலமாக எனக்கு பலரின் மறுபிறவி பத்தின செய்திகள் விஷன் காட்டியபடி இருக்கு சென்ற வாரம் ஒரே சமயத்தில் சுமார் 10 பேர் மறுபிறவி ரகசியம் விஷன் காட்டியது சுற்றம் நட்பு வட்டம் என பலரின் மறுபிறவி பார்த்தேன் எனக்கு ஒரே வியப்பு தான் மறந்துவிடும் என்பதால் டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன் சொன்னா ஆரும் நம்ப மாட்டார்கள் என்பதால் நான் சம்பந்தப்பட்டவரிடம் தெரியப்படுத்தவில்லை என்னைப் பைத்தியம் என்பார்கள் நான் நினைத்துக்கொண்டிருந்தது ; மனிதப்பிறவி வந்த பின் மீண்டும் மீண்டும் அதே தான் தொடரும் என ஆனால் அது பொய் என்று நிரூபித்தது இந்த விஷன் வள்ளல் பெருமான் கூறியது எவ்வளவு உண்மை : “ இந்த மனித தேகம் விட்டால் பின் எப்போது மீட்டும் கிட்டும் என சொல்ல முடியாது – இது கிடைப்பது அரிது “ பாதிக்கு மேல் மனித பிறவியில்லை ஒருவர் 30 ஆண்டுகளுக்கு பின் தான் மறு பிறவி அமைந்துளது அம்மாடி இவ்வளவு காலமா என வாயடைத்துப்போனேன் விலங்கு பூச்சி மாதிரி இருப்பது அறிந்து வருத்தமாக இருந்தது கோடிக்கணக்கான எண்ணங்கள் மனோரதம் ஆசைகள் தீர்க்கப்படாத கணக்குகள் – இதை எல்லாம் வைத்தே இயற்கை மறு பிறவி அமைக்குது இது அறிந்த பின் – வாழ்வின் நிலையாமை முழு பரிமாணத்தில் அறிந்து – வாழ்வில் எதுவும் நிலையில்லை – எல்லாமே சிறிது காலத்துக்கே என்ற எண்ணம் வந்து விட்டது வாழ்க்கை மீது ஒரு வித வெறுப்பு வந்துவிட்டது ஆக இந்த பிறவியில் நாம் பக்குவம் அடைந்தால் அது பயனுள்ள பிறவி இல்லை எனில் அது வீண் என அறிந்து கொண்டனன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.