மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம்
BG Venkatesh / March 17, 2015
மதுரை சித்திரைத் திரு நாள் – சன்மார்க்க விளக்கம்
இந்த நன்னாளிலே, கள்ளழகர் வெள்ளைக் குதிரையிலே ஆரோகணித்து, வைகை ஆற்றிலே இறங்கி தம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இங்கு பொதிந்துள்ள உண்மைப் பொருள் :
** வைகை ஆறு – சோம சூரியாக்கினிய கலைகள் கூடிய சுழிமுனை நாடி
** வெள்ளை குதிரை – வாசி
** கள்ளழகர் – நம் உணர்வு – ஜீவன்
** மதுரை – துவாதசாந்தமாகிய ஆன்மாவின் இருப்பிடம்
அதாவது , நம் உணர்வானது ( ஜீவன் ) , வாசியுடன் கூடி , சோம சூரியாக்கினிய கலைகளுடன் சுழிமுனை நாடியில் ஏறி , பிரமரந்திரம் புகுந்து , துவாதசாந்தமாகிய மதுரை அடைவதை – கதையாக – திருவிழாவாகச் சித்தரித்துள்ளனர் நம் முன்னோர்களும் ரிஷிகளும்
மொத்தத்தில் ,
சித்திரைத் திருனாள் என்பது ஜீவ உணர்வு ஆன்மாவுடன் சங்கமிப்பது ஆகும்
நீங்கள் , மதுரை சென்று இதன் உண்மை அர்த்தம் என்னவென்று விசாரித்தால் – ஒருவர் கூட இந்த பதிலை கூற மாட்டார் – ஏனெனில் இதனை வெறும் சடங்காக – விழாவாக மட்டுமே பார்த்துப் பழகி விட்டனர்.
உண்மை யார்க்கும் தெரியாது – வெளியே வருவதில்லை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.