Saturday, March 7, 2026

அருட்பெருஞ்சோதி - விளக்கம்

அருட்பெருஞ்சோதி - விளக்கம் அருட்பெருஞ்சோதி - விளக்கம் 1 ஜோதி 2. பெருஞ்சோதி 3. அருட்பெருஞ்சோதி 1. ஜோதி என்பது ஜீவ ஒளி 2. சாதனைகளால் - சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி - பெருஞ்சோதியாக ஓங்கி வளரும் இது எப்படி என்றால் - கொல்லன் உலையை ஊதுவது போன்றது - ஊதுவதினால் அந்த நெருப்பு - கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும் கொல்லன் உலையை ஊதுவது : இதனைத் தான் வள்ளலார் " மேடையிலே வீசிகின்ற மெல்லிய பூங்காற்றே " என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார் இதனைத் தான் - " உந்தீபற - உந்தீபற " என்று சமய நூல்களும் , வள்ளலாரும் கூறுகின்றனர் 3. இந்த பெருஞ்சோதி , சாதனைகளின் வளர்ச்சியினால் , ஒரு கட்டத்தில், அருளைக் கொடுக்கும்பொழுது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது அதாவது - முப்புரத்தை எரித்தப் பின்னும், திரைகள் எல்லாம் தீக்கிரையான பின்னும், அது அருளை வீசும்போது , அத அருட்பெருஞ்சோதி ஆகின்றது இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆகும் - ஜீவன் சிவனாக ஓங்கும் வழியும் ஆகும் ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.