Saturday, March 7, 2026

36 படி நிலை

36 படி நிலை 36 படி நிலை நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியதுடனும் வாழ காலை யோகப் பயிற்சி மூச்சுப் பயிற்சி மாலை நடைப் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு என பயின்று வருகின்றேன் மௌனம் பேசியது இதெல்லாம் செய்தாலும் ஆயுள் அதிகபட்சமாக நூறொடு இருபது ஆண்டுகள் மட்டுமே அசுத்த மாயா தத்துவங்களில் தோய்ந்து இருப்பதால் என் செய்வது என்று வினவினேன் ?? அசுத்தத்தில் இருந்து சுத்தாசுத்தமாம் வித்யா தத்துவத்திற்கு ஏறு இலட்சக் கணக்கான ஆண்டுகள் வாழலாம் என்றது. போதாது என்றேன் பின்னும் முயற்சியும் பயிற்சியும் செய்து மேலேறி சுத்த தத்துவமாம் சிவ தத்துவத்திற்கு வா என்றது. கோடிக் கணக்கான யுகங்கள் வாழலாம் என்றது. இதுவும் போதாது என்றேன் முப்பத்தறுவரையும் கடந்து என்னை அடைந்து என்னில் கலந்து விடு என்னில் கரைந்து விடு என்றது. காலத்தைக் கடக்கலாம் காலாதீதன் ஆகலாம் நித்தியன் ஆகலாம் சத்தியன் ஆகலாம் என்றென்றும் வாழலாம் என்றது. அது போதும் என்றேன் வ ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.