Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
அபெஜோதி அகவல் - தவம் பெருமை – புண்ணியம் அருமை
அபெஜோதி அகவல் - தவம் பெருமை – புண்ணியம் அருமை
கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால் 672
எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே 680
விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே 681
எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே 684
ஆக இத்துணை வரிகளிலும் வள்ளல் பெருமான் தான் செய்த தவத்தாலும் , செய்த புண்ணிய பலத்தாலும் தான் இத்துணை உயர்ந்த நிலை அடைந்தனன் என்று விரித்துரைக்க , நம் மக்கள் உரை நடை காட்டி , சாதனம் ஒன்றும் வேண்டாம் – கருணை ஒன்றே சாதனம் என்று இருப்பது முட்டாள்தனமானது
எது எளிதோ அது தனக்கானது என்றிருப்பதுக்கு சமானம்
ஆக செய்த தவத்தால் பண்ணிய புண்ணியத்தாலே தான் அபெஜோதி அடையக்கூடுமே அல்லாது வேறிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.