Wednesday, March 4, 2026

ஔவைக்குறளும் சுத்த சன்மார்க்க சாதனமும்

“ ஔவைக்குறளும் சுத்த சன்மார்க்க சாதனமும் “ அவ்வைக் குறள் விளக்கம் 1. புருவத்திடை இருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கும் உடம்பு இங்கு புருவத்திடை என்பது – எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் புருவமத்தி அல்ல – கண்ணுக்கு மேல் இருக்கும் புருவத்தைக் குறிக்கின்றது – அதன் மத்தியெனில் – கண்ணின் மணியைக் குறிக்கிறது – கண்மணி நடுவில் விளங்கும் திருவடிகளைக் குறிக்கிறது அத்திருவடிகளில் மனதை வைத்து சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் – இம்மாதிரி சாதனம் செய்தால் – சாதகனுடைய உருவம் மறைந்து விடும் அதாவது கண்ணாடி இருள் சூழ்ந்து கருப்பாக மாறி , உருவம் மறைந்து விடும் அதாவது அமாவாசை மாதிரி ஆகிடும் உண்மையிலும் தவத்தில் , அந்த அனுபவத்தில் , சந்திரனும் சூரியனும் ஒன்று சேர்வதால் , இந்த அமாவாசை அனுபவம் கண்ணாடி தவத்தில் கிடைக்கும் இந்த கண்ணாடி தவம் தான் சன்மார்க்கத்தின் முதல் சாதனம் பயிற்சி இதைத் தான் மற்றுமொரு ஔவைக்குறள் : 14. கலை ஞானம் (131-140) ***************************** 131.சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது முத்திக்கு மூலமான தவப்பயிற்சி : சூரியனும் சந்திரனும் ஒன்று கலப்பது தான். அதுவும் மூலத்தில் மூலத்தில் என்றால் உலகம் நினைப்பது போல் முதுகுத் தண்டின் அடியில் அல்ல உலகம் ஏமாத்திவிடும் – மிக்க கவனம் தேவை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.