Saturday, March 14, 2026

வித்தியாசமான அன்பர்

வித்தியாசமான அன்பர் உண்மை சம்பவம் - கோவை நேற்று 9.4.22 ஒருவர் திருப்பூரில் இருந்து எனைப்பார்க்க வந்தார் பயிற்சி கற்க வரவிலை – என்னைப்பார்த்துவிட்டு செல்ல வந்ததாகத் தெரிவித்தார் ஏன் என கேட்டேன்? நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் 1 ஸ்ரீ ராமன் – பல முறை – ஒரு முறை என்னைத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் 2 ஸ்ரீ கிருஷ்ணர் – பல முறை – அடிக்கடி தரிசனம் கிடைக்கும் 3 ஆதி சங்கரர் 4 லட்சுமி தேவி – கொள்ளை அழகு 5 முருகன் – லட்சுமி தேவி யை விட கொள்ளை அழகு – பயங்கர அழகு 6 அவ்வையார் 7 பட்டினத்தார் – கையில் கரும்புடன் 8 இமயமலை பாபா – நான் பாதி கண் மூடி – பாதி திறந்து செய்த போது – இது சரி – இப்படியே செய்யவும் எனக் கூறிச் சென்றார் 9 ஸ்ரீ ராகவேந்திரர் – உரையாடி இருக்கின்றார் 10 அம்மை + அப்பன் , சிவம் + சக்தி 11 சித்தர் போகர் – நான் சித்த வைத்தியம் படிக்கலாம் என்று நினைத்த போது – இந்த ஜென்மத்தில் நடக்காது என்றார் – நான் விட்டுவிட்டேன் 12 அனுமார் 13 Jesus Christ 14 அகத்தியர் 15 வாலை 3 முறை 16 ருத்திர மகாதேவர் – மிக்க கோபக்காரர் 17 குண்டலினி இந்த நிலை இருக்கும் ஒரு மனிதரை ஒரு முறையாவது நேரில் காண வேணும் என வந்ததாகக் கூறினார் இந்த மாதிரி இருந்தும் , நான் பந்தா செயவிலையாம் – இது அவர்க்கு பிடித்திருந்ததாம் அவர் கைலாசா அதிபதி ?? சுவாமி நித்யானந்தாவிடம் தியானப் பயிற்சி எடுத்துக்கொண்டாராம் அவர் கூறுவதை கூட அவர் நம்பவிலையாம் ஆனால் நான் கூறுவதை அவர் நம்புவதாகக் கூறினார் வித்தியாசமான மனிதர் எனக்கு என்ன சொல்வது என தெரியவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.