Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 13, 2026
வள்ளலாருக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன ??
வள்ளலாருக்கு இறைவன் கூறிய அறிவுரை என்ன ??
அறிவுரை என்னெனில் ?
அருளைப் பெற்று / அருட்சக்தி மூலம் மரணம் பிணி மூப்பு வென்றும் , மரணமிலாப்பெருவாழ்வும் , முத்தேக சித்தி , ஞான சித்தி என எல்லாம் அடைக என அறிவுறுத்தினாராம்
அகவல் வரிகள்
• அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
• அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
• 491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
• 492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
• 493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
• 494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
• 495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
• 496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
• 497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
• 498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
• 499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
• 500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே
• 501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
• 502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
• 503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
• 504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
• 505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே
• 506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே
• 507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
• 508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
• 509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.