Wednesday, March 4, 2026

எட்டிரெண்டு பட்டி மண்டபம் – சன்மார்க்க விளக்கம்

எட்டிரெண்டு பட்டி மண்டபம் – சன்மார்க்க விளக்கம் அபெஜோதி அகவல் எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப் பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே 566 இது முக்கியமான அகவல் வரிகள் ஆம் எட்டிரெண்டு – பட்டி மண்டபம் என பெரிய ரகசியம் உடைக்கிறார் பெருமான் எட்டிரெண்டு என்றால் அகரம் உகரம் என பொது விளக்கம் அளித்து போய்விடுவார் உரை செய்யும் அறிஞர் அதை எப்படி சேர்ப்பது என்றால் பதில் அளிக்க மாட்டார் 8*2 க்கு மூன்று பொருள் விளக்கம் உள்ளது முதன்மை விளக்கம் தான் முக்கியம் 1 அது காற்றும் கனலும் கூட வைக்கும் ரகசியம் இதை விவரம் அறிந்த குருவிடம் தான் கற்கணும் 2 அ கரம் உகரம் – இது ஆன்மா ஜீவன் என பொருள்படுவது 3 பிராணன் அபானன் இதில் 2 வதை தான் பொருளாக கூறுவர் - மற்றது உலகுக்கு தெரியாது இதை கடினமாக பயிற்சி செய்தால் , 20 ஆண்டுகளில் சேர்த்து முடிக்கலாம் பட்டி மண்டபம் – சுழி வாசல் தான் பட்டி மண்டபம் அதாவது பட்டி மண்டபம் ஏற வேணுமெனில் , எட்டிரெண்டு அனுபவம் மிக அவசியம் அது இல்லாமல் ஆகாது என்றவாறு அதை கூட்ட வைத்து என்னை தனி ஆளாக ஜீவனை சுழி வாசலில் ஏற்றி அமர வைத்த ஆன்மாவாகிய மெய்த் தந்தையே என பெருமான் தன் அனுபவம் பாடுகிறார்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.