சாகாக்கல்வி – தரம் படி நிலைகள்
முதலில் பரிசம் நிச்சயம்
பின்னர் தான் திருமணம் போல்
சாகாக்கல்வியில்
முதலில் தேக நீட்டிப்பு – காயகல்பம் காயசித்தி மூலம்
பின்னர் தான் மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக ஒளி தேக சித்தி எல்லாமே
முதலுக்கு பிரமாணம் :
குறள்
1 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
2 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பின்னதுக்கு
1 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
2 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
முன் செய்த பிறவிகளில் காயகல்பம் காயசித்தி முற்றி இருப்பின் , இனி வரும் பிறவிகளில் சாகாக்கல்வி சித்தி ஆகும்
இது படி நிலை ஆம்
வெங்கடேஷ்
10
அபெஜோதி அகவல் – அருள் பெருமை
எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே 1161
விளக்கம் :
அதாவது அபெஜொதி அனுபவம் சிற்றம்பலப்பிரவேசம் யோகப்பயிற்சியால் சாத்தியமில்லை
அந்த இடத்துக்கு மனோ இந்திரியங்கள் கரணத்துக்கு எந்த வேலையுமிலை
அது வேலை செய்யாது
ஆகையால் அருளால் மட்டுமே இது சாத்தியமாகும் என தெளிவுபடுத்துகிறார் பெருமான்
அதை எனக்கு அருள் செய்தார் ஆண்டவர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.