Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
சுத்த சன்மார்க்கம் பெருமை
சுத்த சன்மார்க்கம் பெருமை
1 வள்ளல் பெருமான் செய்த கண்ணாடி தவம் பத்திய
உண்மைகள் அறிய வேண்டுமெனில் ??
உபநிடதம் படித்தால் தான் விளங்கும்
2 வள்ளலார் உபதேசக்குறிப்பில் விளக்கும் ஜீவன் ஆன்மா வித்தியாசம் புரிய வேண்டில் ?
கடோபநிடதம் கூறும் இரு பறவை கதை படித்தால் தான் புரியும்
3 பல் அண்டம் கோட்பாடு
அருட்பா ஆறாம் திருமுறை அனுபவ மாலை
உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே 63
இதை புரிந்து கொள்ளணும் எனில் ?? பாகவத புராணம் படித்தால் தான் புரியும்
இது பல் அண்டம் கோட்பாட்டை நிரூபிக்குது
விஞ்ஞானம் வெறும் பேச்சளவிலே நிற்குது
4 அருட்பா - திருவடி பெருமை
பூ ஒன்றே முப்பூ ஐம்பூ எழுபூ நவமாம்
பூ இருபத்தைஐம் பூவாய்ப் பூத்துமலர்ந திடவும்
நான் ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணி விளங்குறவும் அதின் நற்பயன் மாத்திரையில்
மேவொன்றா இருப்ப அதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச் சேவடியின்
பா ஒன்று பெருந்தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன்
பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி-
இந்த பாடல் புரிய வேண்டுமெனில் ??
சைவ சித்தாந்தம் படித்தால் தான் , படித்திருந்தால் தான் புரியும்
ஆக சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சித்தாந்தத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் மாளிகை ஆகும்
அடிப்படைகள் தான் இதிகாசம் புராணம்
இவைகள் +2 பட்டப்படிப்பு எனில் , சுத்த சன்மார்க்கம் என்பது டாக்டர் படிப்பு மாதிரி
நம் சன்மார்க்கம் அன்பர் எல்லாரும் இதிகாசம் புராணம் எலாம் சமய மதம் சார்ந்தது – அதை ஒதுக்கு என்பர்
சிரிப்பாக இருக்கு அவர் நடவடிக்கை
என்னமோ எல்லாம் தெரிந்து விட்ட மாதிரியாக
வள்ளலார்க்கு தெரியாதது இவர்க்கு தெரிந்துவிட்ட மனோபாவம்
இவர் தான் ஐந்து திருமுறைகளையே ஒதுக்கி வைத்துவிட்டு ஆறாவது மட்டும் படிப்பவராயிற்றே
கலிகாலம்
அறிவை மறைக்குது
சன்மார்க்கம் காலம் பிறக்கும் போது தெளிவு பிறக்கும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.