Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஜீவன் - ஆன்மா பங்கு
ஜீவன் - ஆன்மா பங்கு
என் நீண்ட நாள் சந்தேகமாக
ஜீவன் ஆன்மாவுடன் கலக்க சேர அழுது புலம்புது கரையுது எல்லாம் செயுது
அதனால் சாதனையின் போது கண்ணில் நீர் சொரியுது
ஜீவ உருக்கம் வெளிப்படுத்துது
ஆனால் ஆன்மா அப்படி ஒன்றும் செய்வதாய் தெரியவிலையே
அது என்ன செய்யுது தன் பங்குக்கு ??
பதில் :
ஜீவன் இருப்பது இருமையில்
அதனால் அழுது புலம்புது கரையுது
அது தனக்குட்பட்ட விதிகளுக்குள் செயல்படுது
மும்மலம்
36 தத்துவம்
கோள்
வினை என ஏகப்பட்ட வரையறைகள்
இதிலிருந்து வெளிவரவே முடியாது
வர வழியும் தெரியாது
தன் பங்குக்கு என்ன செய முடியுமோ ?? அதை செயுது
தவம் தானம் தருமம் செயுது
சத்விசாரம் கூட
அதுக்கு மேல் ஒண்ணும் ஆகாது
ஜீவன் ஆன்மாவின் உதவி நாடுது
ஆனால் ஆன்மாவின் நிலை அப்படிப்பட்டதல்ல
சர்வ வல்லமை வாய்ந்த பரம்பொருள்
இரு மலம் இல்லாதது
அது ஜீவனுக்கு வழி காட்டுது
சாதனையில் வழி காட்டுது
பலம் சேர்க்குது மேலேற்றுது பக்குவம் கூட்டுகிறது
ஒரு கட்டத்தில் அருள் கூடி வரும் சமயம்
ஜீவன் தன் பாதையிலே சென்றால் பல நூறு பிறவி பிடிக்கும் ஞானம் அடைவதை – ஆன்மா தன் ஆற்றலினால் தானே தன் பிறவி அம்சங்களை
பெற்றோர்
கல்வி
உடல் கருவி கரணம்
வினை
சத்தினிபாதம்
எல்லாவற்றையும் கணக்கிட்டு பிறவி அமைத்து உடல் எடுத்து சாதனை செய்து மேலேறும்
இது தான் ஆன்மா ஜீவனுக்கும் தனக்கும் கதி சேர எடுக்கும் பெருமுயற்சி ஆகும்
பின் ஆன்மா சிவத்துடன் கலக்கும் சிற்றம்பலத்திலே
பிறவித் தளையில் இருந்து விடுபடுவது அவ்வளவு லேசு பட்ட காரியமல்ல
என்ன என்ன தடைகள் – வழிகள் என்பதே மனிதர்க்குத் தெரியாது
ஆகையால் அதை நடத்தி முடிக்க ஆன்மா தயவு இல்லாமல் ஆகவே ஆகாது
தயவால் ஆன்மா ஜீவனை மேலேத்த
அருள் கூட ஆன்மா சிவத்துடன் கலக்கும்
இது தான் ஆன்மாவின் அரும்பெரும் பங்கு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.