Saturday, March 7, 2026

ஆரியர்

ஆரியர் 1 அகவல் 1 மந்தண மிதுவென மறுவிலா மதியால் அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி 2 சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென் ஆரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி 3 ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி காரியம் விளக்குமோர் காரண விளக்கே 2 திருமந்திரம் : 1 “ ஆரியன் “ நல்லன் குதிரை ரெண்டு உள 3 திருவாசகம் மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் “ ஆரியனே “ 4 குறள் அறவாழி “ அந்தணன் “ தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது இங்கு குறிக்கப்பெறும் அந்தணர் ஆரியன் என்பதெல்லாமே பிராமணரை /ஐயரை குறிக்கவரவிலை தர்மம் ஆகிய ஆன்மா கடவுளைத் தான் குறிப்பிடுது என்றால் அது தவறல்ல ஆர் தர்ம அற வழியில் நின்று வாழ்கிறாரோ ? ஆர் மெய்ப்பொருள் சார்ந்து வாழ்க்கை வாழ்கிறாரோ ? தவம் செய்து அகக் கனலை வளர்க்கின்றாரோ ?? அவரெல்லாமே அந்தணர் ஐயர் தான் ஆரியர் தான் அந்த காலத்தில் ஐயர் பிராமணர் இவ்வாறு வாழ்க்கை வாழ்ந்து வந்த தாலே , அவர் தங்களை ஐயர் ஆரியர் என அழைத்துக்கொண்டனர் ஏன் ? ஜெர்மனி ஹிட்லர் கூட தன்னை ஆரியன் என்றே அழைத்துக்கொண்டான் உலகத்தை அரசியல் செய்து பிழைப்பு நடத்துபவரை நம்பக்கூடாது உலகத்துக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.