Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
நடராஜபதி மாலை - சிற்றம்பலம் பெருமை
சிற்றம்பலம் பெருமை - அருட்பா ஆறாம் திருமுறை
நடராஜபதி மாலை
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
சுகாதீத வெளிநடுவிலே
அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
பொற்பொடுவி ளங்கிஓங்கப்
புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
பூரணா காரமாகித்
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
சிறப்பமுதல் அந்தம்இன்றித்
திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
தெளிந்திட வயங்குசுடரே
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
சுந்தரிக் கினியதுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
விளக்கம் :
சிற்றம்பலம் என்பது சுத்த சிவ சுகாதீத வெளி
அது உச்ச கட்ட அவத்தை நிலை ஆகும்
அது அருள் விளங்கி ஓங்கும் நிலை
எல்லாம் இங்கு தான் ஆரம்பிக்கின்றது முடிகிறது
இதன் தாக்கம் அனுபவம்
அகம்
புறம்
அகப்புறம்
புறப்புறம் எனும் நான்கிலும் புணர்ந்தே விளங்கும்
ஞான சித்திக்கான அனுபவ ஸ்தானம் ஆகும்
இந்த நிலை ஏறா வரை ஞான சித்தி கைவாரா
இந்த அனுபவமே சுத்த சிவ சன்மார்க்கம் ஆகும்
ஆக ஒரு இடம் ஒரே இடம் இவ்வளவு பெருமைகளை பெற்று சிறப்புடனே விளங்குது
அங்கு நடராஜர் எனும் அருட்பெருஞ்ஜோதி நடனம் ஆடுகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.