Saturday, March 7, 2026

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 53

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 53 பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும் தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி பொருள் : மயக்கமுற்ற உலகத்தவர் எல்லாம் சந்தேகமுற்று புறத்திருக்க , நான் என் அகத்திலே உள்ளே சென்று , திரு நடனம் கண்டு களிக்கின்றேன் - என் தனித் தலைவர் ஆன்மா அருகே வந்து , என்னை அணைத்து - என்னுடலில் கலந்து - சுழுமுனை அனுபவம் கொடுத்து நிற்க , நான் அவர் திருவடி பிடித்துக்கொள்ள - அது " இனி கவலைப்படேல் - மயக்கம் வேண்டாம் - வாழ்வாங்கு வாழ்வு உனக்கு அளித்தோம் - ஏழுலகம் மதிக்க வாழ்வு வாழ்க என்று எனக்கு சக்கரமும் - மாற்று அளக்க முடியாத அளவு கொண்ட ( பொற்கங்கணம் ) பொன் - மஞ்சள் ஒளி தன் உடலில் பரவச் செய்தார் என்று தன் ஆன்ம அனுபவம் மனமாகிய தோழிக்கு உரைக்கின்றார் இது ஆன்ம அனுபவம் பற்றிய பாடலாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.