Saturday, March 7, 2026

வள்ளல் பெருமானின் ஆன்ம அனுபவம்

வள்ளல் பெருமானின் ஆன்ம அனுபவம் ஆறாம் திருமுறை - இறை திருக்காட்சி 1. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை அருட்பெருஞ் ஜோதியை அரசே மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியைப் பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான தீபத்தைக் கண்டுகொண் டேனே. மெய்ஞ்ஞான தீபம் = ஆன்ம ஒளி 3. சிதத்திலே ஊறித் தெளிந்ததெள் ளமுதைச் சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப் பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப் பரம்பர வாழ்வைஎம் பதியை மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தைமா மந்திரந் தன்னை இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட இறைவனைக் கண்டுகொண் டேனே. 4. உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த ஒருபெரும் பதியைஎன் உவப்பைப் புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது பொருளைஎன் புண்ணியப் பயனைக் கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த குருவைஎண் குணப்பெருங் குன்றை மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த வள்ளலைக் கண்டுகொண் டேனே. 5. புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட பொற்சபை அப்பனை வேதம் சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட ஜோதியைச் சோதியா தென்னை மல்லிகை மாலை அணிந்துளே கலந்து மன்னிய பதியைஎன் வாழ்வை எல்லியும் இரவும் என்னைவிட் டகலா இறைவனைக் கண்டுகொண் டேனே. விளக்கம் : இந்த நான்கு அருட்பாவில் , இறைவன் எனும் ஆன்மாவை தான் கண்களால் கண்டதாக பாடுகிறார் அதனால் தான் இறை திருக்காட்சி என தலைப்பு இது எல்லாமே ஆன்ம அனுபவ பாடல்கள் ஆகும் ஆனால் உலகம் ஆன்மா என்றால் ஏதோ வேறு ஒரு சக்தி தனக்கு புறம்பான ஒரு ஆற்றல் என்றே எண்ணி எண்ணி ஏமாந்து போயிருக்கு ஏன் இதுகாறும் வரையிலுமே உண்மை அறிந்தது இல்லை உணர்ந்ததும் இல்லை உணரவும் உணராது நாம் தான் உலகத்தை விட்டு தூரமாக செல்ல ஒதுங்க வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.