Friday, March 6, 2026

மெய்யருள் வியப்பும் உரை நடையும்

மெய்யருள் வியப்பும் உரை நடையும் அருட்பா ஆறாம் திருமுறை - மெய்யருள் வியப்பு பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே. எனக்கும் உனக்கும் ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே. எனக்கும் உனக்கும் அருட்பா உரை நடை – பேருபதேசம் நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: “ ஒரு ஜாம நேரம் “ , மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. சுத்த உஷ்ணம் – ஆன்மாவால்/ அன்பினால் உண்டாவது ஆன்ம நிலை அனுபவம் உரை நடையில் ஒரு ஜாமம் ஆன்ம நெகிழ்ச்சி எனும் நிலையில் நின்றக்கால் எல்லாம் சித்தி என்ற வள்ளல் பெருமான் , ஏன் மெய்யருள் வியப்பில் , தான் 12 வயது முதல் சுமார் 45 வயது வரை 35 ஆண்டுகள் தவத்தில் தான் பட்ட துயர் துன்பம் பாடு உலகம் கேட்டால் மலையும் கரையும் உருகும் கூறினார் ?? ரெண்டும் முரண் தானே ?? மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தெரியும் ஆனால் ஆழ்ந்து ஆய்ந்தால் தான் உண்மை விளங்கும் அதாவது வள்ளலார்க்கு ஆன்ம நிலைக்கு அன்பு எனும் நிலைக்கு வருவதுக்கு பல்லாண்டுகள் தவம் தேவைப்பட்டது அதனால் மெய்யருள் வியப்பு பாடல் அவ்வாறு உரை நடை விளக்கம் : ஆன்ம நிலை அடைந்த பின் சுத்த உஷ்ணம் உண்டான பின் சுமார் 3 மணி நேரம் அந்த நிலையிலே நின்றக்கால் , நாம் ஞான தேகம் பெற முடியும் என்பது கருத்தாக அமையுது அந்த அன்பு ஆன்ம நிலை அடைய ஒவ்வொரு உயிர்க்கும் பல்லாண்டு தவம் செய வேண்டியதாகுது ஏன் பல பிறவி கூட ஆகலாம் - உண்மையாகவே அன்பு = ஆசையற்ற நிலை அது ஆன்ம நிலை ஆனால் உலகம் அன்பு எனில் உலகத்தவர்க்கு காட்டும் இரக்கம் கருணை ஈவு என பொருள் எடுப்பதால் உரை நடைக்கு சரியான பொருள் எடுக்காமல் மோசம் போகின்றார் நம் சன்மார்க்க அன்பர் உரை நடையால் மோசம் போனார் எனில் உலகத்தவர் போலி குருக்களால் மோசம் போகின்றார் அருள் இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.