Wednesday, March 4, 2026

சுத்த பிரணவ ஞான தேகம்

சுத்த பிரணவ ஞான தேகம் : சுத்த தேகம் : நெற்றியில் இரு திருவடிகளின் இணைப்பினாலும் செயல்பாட்டினாலும் , பிராணன் அசைவற நிற்கும்.அதனால் உட்செலும் அபானன் அளவு குறைந்து , குறைந்து – நாளும் குறைந்து வந்து , முடிவில் பூரணமாக குறைந்துவிடும். இது தான் உடலில் அமாவாசை. இதனால் உடலில் உள்ள தச வாயுக்களும் மேல் இழுக்கப்பட்டு பிராணனில் கலக்கும். இதனால் உடல் பாகங்களும் தத்துவங்களும் செயல்படாது. இது சமாதி சமாதியினால் – நோயற்ற உடல் சித்திக்கும் திருவடிகள் செயல்பாட்டினால் – விந்து மேலேறி புருவ மத்திக்கு வந்தடையும் – அங்கிருக்கும் மூலாக்கினியால்,விந்து பரவிந்துவாக மாற்றம் அடையும். பரவிந்து சுழிமுனையில் ஏறி, பிரமத்துவாரம் திறந்து , துவாதசாந்தப் பெருவெளி அடைந்து , அதன் மேல் உள்ள சிதாகாசப் பெருவெளியில் முழு நிலவாக ஜொலிக்கும் – ஒளிவிடும் – இது உடலில் ஏற்படும் பௌர்ணமி இந்த ஒளிக்கதிர்கள் – பால் போன்ற வெண்ணிறமாக இருக்கும் – குளிர்ச்சியாகவும் இருக்கும் – இது சுத்த உஷ்ணம் ஆகும் இது சிறு சிறு துளிகளாக சாதகன் உடல் மீது வீசும் – இது போகாப்புனல் – இதனால் சாதகனுக்கு வெம்மை என்னும் பசி நீங்கும் – தூக்கம் போகும் இதனால் சாதகனுக்கு உணவு , நீர் தேவை இல்லை ஆதலால் , மல ஜல உபாதைகள் இலையாகையால் – உடல் சுத்த உடம்பாகிவிடும் வள்ளலார் ஆறாம் திருமறையில்- ” போகாப்புனலால் சுத்த உடம்பினராம் ” இந்த சுத்த உஷ்ணமானது உடலின் அசுத்த அணுக்களை வேதித்து சுத்த அணுக்களாக மாற்றி – சுத்த உடம்பாக மாற்றிவிடுகிறது இந்த சுத்த உஷ்ணமானது இலட்சக்கணக்கான degree அளவு உஷ்ணம் வெளிப்படுத்தும் – அதனால் மும்மலங்களும் நாசம் ஆகும் – திரைகளும் விலகும் – ஆன்ம தரிசனம் கிட்டும் சுத்த உஷ்ணம் காரண உஷ்ணமாக மாறும் போது – அது கோடிக்கணக்கான degree அளவு உஷ்ணம் வெளிப்படுத்தும் – அதனால் உடல் இன்னும் நுண்மை நுண்மை அடைந்து பிரணவ ஞான தேகமாக மாறிவிடுகிறது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.