Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
வாக்கு பெருமை
வாக்கு பெருமை
கோபம் வந்தால்
அதை வெளிப்படுத்திவிடுதல் நலம்
வீட்டிலும் வேலையிலும் சரி
மனைவியிடத்திலும் நம் உயர் அதிகாரியிடத்தும்
அப்படி செய்யாமல் அடக்கி வைத்திருந்தால்
அது பின்னர் எரிமலை ஆக வெடிப்பது உலகறிந்த விஷயம்
இதை நிரூபிப்பது தான் இந்த பதிவு
96 தத்துவங்களில்
36 தத்துவம்
60 தாத்வீகம்
இந்த 60 ல் தான் வாக்கு
இது பத்தி எனக்கு அவ்வளவாக அறிவு இல்லாதிருந்தது
அதை சரி செய்துவிட்டது இயற்கை
வாக்கு – 4 வகை என்பர் ஞானியர்
வைகரி - வாய் திறந்து கூறுதல் மந்திரம் உட்பட
மத்திமை - வாய் திறக்காமல் மனதால் உரைப்பது - 108 தடவை வைகரிவிட சத்தி வாய்ந்தது
பைசந்தி - எழுதியதை பார்த்து உச்சரித்தல் மெதுவாக - 11664 தடவை மத்திமை விட சத்தி வாய்ந்தது
சூக்குமை - மனதாலும் உரைக்காமல் அப்படியே அடக்கு வைத்தல் – 12 , 59 , 712 தடவை பைசந்தி விட சத்தி வாய்ந்தது
இதை கணித்தவர் நம் ஞானியர் - கணித மேதைகள் அல்லர்
அதனால் தான் அடக்கி வைக்கப்பட்டது எரிமலை என வெடித்து சிதறிவிடுது ஒரு கால கட்டத்தில்
அதனால் நம் இன்பம் துன்பம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி மனதை லேசாக்கி விட வேணும்
மரணத்தின் போது அழுதுவிடுதல் நலம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.