Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
போகர் – Lao Tzu - Eckhart Tolle “
போகர் – Lao Tzu - Eckhart Tolle “
Eckhart Tolle – ஒரு சிறு குறிப்பு
இவர் பற்றி எழுதியே ஆக வேண்டி இதை எழுதுகின்றேன்
Eckhart Tolle – ET என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு சிறந்த மேலை நாட்டு தத்துவ ஞானி ஆவார்
இவர் தன் ஊரிலேயே தங்கி இருக்க முடியாத அளவுக்கு உலகம் சுற்றி ” நிகழ் காலத்தில் வாழ்வது எப்படி ” என்று பாடம் சொல்லிக்கொடுக்கின்றார் – ” How to Live in the Present ”
இவர் எழுதியுள்ள ஆங்கில நூலகள் எல்லாம் அற்புதமாக இருக்கும்
அதில் நான் படித்தவை –
1 Power of NOW – 2010 ல் படித்தேன்
2 Stillness Speaks
3 The New Earth
1 Power of NOW படித்த போது , நான் அதிர்ந்து விட்டேன்
நான் செய்துகொண்டிரூக்கும் சாதனம் அப்படியே இவரும் கூறியிருந்தார்
அவர் என்ன கூறுகின்றார் எனில் :
” Compassion will rise when two Opposites join – positive + and negative -”
அதாவது ” Compassion – Empathy – ஜீவகாருண்ணியம் – தயவு எப்போது ஒரு சாதகனுக்கு வருமெனில் – ரெண்டு எதிர் எதிர்கள் –
ரெண்டு எதிர்மறைகள் சந்தித்துக்கொண்டால் வரும் ”
இது 100 /100 உண்மை
நான் இதைத் தான் செய்துகொண்டிருக்கின்றேன் – இரு கண்கள் +/ _ சேர்க்கின்ற பயிற்சி – இது தயவு உண்டுபண்ணும்
ஆன்ம நிலைக்கு கூட்டிச் செல்லும்
உலகில் ஞானிகள் கருத்து ஒற்றுமையுடன் தான் இருப்பார்கள் – வேறுபடமாட்டார்கள்
இவர் Tao – Te Ching என்ற 3000 ஆண்டு பழைமை வாய்ந்த சீன நூல் அடைப்படையாகக் கொண்டு படித்து , கற்று , மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றார்
இந்த நூல் என் வாழ்க்கையை மாற்றி அமைத்த பல நூல்களில் ஒன்றாகும்
நீங்களும் படித்துப் பாருங்கள்
Tao – Te Ching என்ற சீன நூலை எழுதியவர் லா வோட்சு Lao Tzu ஆவார்
இவர் யார் எனில் ?
இவர் நம் த நாட்டு போகர் சித்தர் ஆவார் – அப்படி தான் என நம்பிக்கை நிலவுது
இவர் தான் சீனாவுக்கு சென்று அங்கு தங்கி அந்த நாட்டு மொழியில் பல நூல்கள் எழுதி ஞானம் போதித்தார்
அந்த நூலை வைத்து உலகெங்கும் ஞானம் – நிகழ் காலத்தில் வாழ்தல் என கற்பித்துவருகிறார் ET
ஆக உலகெங்கும் ஞான ஒளி பரப்புவது நம் தமிழும் – தமிழ் சித்தர்கள் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.