Monday, March 2, 2026

திருப்பாற்கடல் சன்மார்க்க விளக்கம்

திருப்பாற்கடல் கடைதல் – சன்மார்க்க விளக்கம் BG Venkatesh / January 30, 2015 திருப்பாற்கடல் கடைதல் – சன்மார்க்க விளக்கம் இதிகாசம் – புராணக்கதை : ஆதி காலத்தில், திருப்பாற்கடல் என்றவொரு கடலை , தேவர்கள் ஒரு பக்கமும் , அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடைந்தார்கள் என்றும், முதலில் விஷம் வந்ததாகவும் , பின் லக்ஷ்மி, அமுத கலசம், போன்ற அற்புத பொருட்கள் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு உண்மை விளக்கம் : உலகினில் பாற்கடல் என்றவொரு கடலே இல்லை எனலாம் – சிதாகாசப் பெருவெளியையே பாற்கடலாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது. அறிவியல் இதனை – பால்வெளி என்று அழைக்கின்றது – என்னவொரு ஒற்றுமை ??? சாதனைகள் மூலம் , திருவடி கொண்டு சிதாகாசப் பெருவெளியை அடைந்து , அதனை , குரு சொல்லிகொடுத்த ” திருவடி ” வித்தை மூலம் கடைதலை செய்தால் , அதிலிருந்து எல்லா பரசெல்வங்களும் வெளிப்படும் – திருவடி கொண்டு செய்யப்படும் இந்த தந்திரத்திற்கு ” சாலனம் ” என்று பெயர். சிதாகாசப் பெருவெளியிலிருப்து வெளிப்படும் திவ்விய பொருட்கள் : 1. லட்சுமி 2. காமதேனு – பசு 3. அமுதக் கலசம் 4. நினைத்ததைக் கொடுக்கும் கல்ப விருக்ஷம் மேற்கூறியவைகள் யாவும் ஆன்மா மற்றும் திருவடியின் வெவ்வேறு அம்சங்களும், பிரதிபலிப்புகளாகும் இவைகள் யாவும் இறைவனால் , தகுதி உடைய சாதகருக்கு வழங்கப்படும் பர உதவிகளாகும் – இவைகள் கொண்டு அவன் வாழ்வை பசி, காசு, பணம், போன்றவற்றிற்கு செலவிடாமல் , சாதனையிலேயே முழுவதுமாக இறங்கி , பசி, தாகம், நித்திரை, நோய், வினைகள் , மலங்கள் எல்லாவற்றையுமே வென்று , மரணமில்லாப் பெருவாழ்வு பெற கொடுக்கப் படும் பர உதவிகளாகும் ஒரு சாதகன் திருவடி கொண்டு , ஆன்ம நிலை அடைந்து விட்டாலே , அவன் மரணத்தை வென்றுவிட்டதாக கருதலாம் – அவன் பொன்னம்பலம் – சிற்றம்பல வெளிகளுக்குள் நுழையும் தகுதி பெற்றுவிட்டதாகவும், முத்தேகச் சித்தி பெறத் தகுதி பெற்றுவிட்டதாகவும் கருதலாம். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.