Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
அருட்பா - 6 ஆம் தி்ருமுறை
அருட்பா - 6 ஆம் தி்ருமுறை
ஞான சரியை - மரணமிலாப்பெரு வாழ்வு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே
பொருள் :
இது மிக மிக முக்கியமான பாடலாகும்
இதில் தவத்தின் மேன்மை குறிப்பிட்டுள்ளார் வள்ளல் பெருமான்
அதாவது திருவடி தவத்தினால் தன் மனம் இளகி உருகி நெகிழ்ந்து - அந்த ஒரே நினைப்பினால் தன் மனம் தானும் நெகிழ்ந்து உருகி கண்ணில் இருந்து நீர் பெருகி எடுத்து ஓடி அதனால் உடல் நனைந்து போனது எங்கிறார்
திருவடிகள் கல் மனதை கரைத்துவிடும் -
நம் மனம் உருகுவதை இந்த புற இந்திரியமான கண் வெளிப்படுத்துகிறது
அந்த நிலையில் இறையை அபெஜோதியை போற்றுங்கள் துதி செயுங்கள் உலகீர்
அப்போது மரணமிலாப் பெருவாழ்வு பெற்றிடலாம்
நான் பொய் உரைக்கவிலை - சத்தியம் செப்புகிறேன்
பொன்னம்பலத்திலும் சிற்றம்பலத்திலும் உள் புகும் நேரமிதே
இதன் பொருள் என்ன வெனில் : யார் பொன்னம்பலத்திலும் சிற்றம்பலத்திலும் உள் புகுகின்றாரோ அவர்க்கே அந்த மாபெரும் வரம் கிட்டும்
அது அருள் வெளிகளாகும்
இது இரு கண்ணில் புகுவதல்ல - மற்றவர் அர்த்தம் கற்பிப்பது போல்
ஞான சபையில் இரு மருங்கே பொற்சபை சிற்சபை என வைத்திருப்பதால்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.