Tuesday, March 3, 2026

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 82

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 82 கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன் கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப் பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே. பொருள் : இந்த புழு உடம்பில் கிடக்கும் நான் செய்த பொய்த்தவத்தை மெச்சி ஏற்று - என்னை உயர் நிலை ஆம் தவிசு ஏற்றி - இரு புருவ மேடையில் ஏற்றி - விந்துவால் ஆகிய சுப்பிரமணி என் சிரசில் சூட்டி - மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே ஆசாரியனே புலால் உண்போர் காணமுடியா பொன்னே நான் உண்ணும் புத்தம் புது அமுதே விலையில்லா மணியே - வெறுப்பில்லா மருந்தே ஆடல் அரசே என் சொல்மாலையும் அணிந்து அருள் செய்கவே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.