Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 5
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 5
1 அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
பொருள் :
உணவு உண்ண அழைத்த தன் தோழிகளுக்கு
பதில் உரைக்கிறார் வள்ளல் பெருமான்
சிற்றம்பலத்தே ஆடும் மலர்ப்பாதத்தின் அமுதம் – தேன்
அபெஜோதி யின் பெருமை ஆகிய அருள் அமுதமும் – அதில் என் அன்பெனும் ரசத்தை கலந்து – என் அபெஜோதிக்கணவர் உருவமாம் தேம்பாகு
இவையெலாம் நான் கலந்து உண்டதால் , எனக்கு பசி ஸிறிதுமிலை என் தோழியே என்று கூறுகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.