Saturday, March 7, 2026

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 4

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 4 1 இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார் யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப் பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன் விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும் விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே பொருள் : எல்லா ஆசையும் தீர்க்க வல்ல அபெஜோதி ஆண்டவர் – நான் – அடியேன் செய் தவத்தால் – என்னுடலில் கலந்தார் நான் செய்த தவம் போல் யார் செய்தார் கேள் என் தோழி ?? அபெஜோதி எண்னும் மனத்தாலே – எந்த மதத்தலைவரையும் சமயக் கடவுளையும் நான் பிரித்துப்பார்க்கவிலை – ” எல்லாம் ஒன்று” என்ற ஒருமை ” நிலைக்கு நான் வந்து விட்டேன் நான் அவன் மீது கொண்டு இருக்கும் ” பித்தினால் ” அன்பின் மேலீட்டினால் அவனைப்பிரிவேனோ – பிரிவு என்ற வார்த்தையைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடியா அண்ணல் ஜோதியின் திரு நடம் கண்டேன் – அதை கண்டால் பேய் கூட விட இசையாது என் நிலை என்ன சொல்வது தோழி – நீயே சொல்?? எல்லாம் அபெஜோதி அனுபவப் பாடல் தவம் – தவம் வேண்டும் – அதை செய வேண்டும் – அன்ன தானம் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.