Saturday, March 7, 2026

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 13

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 13 கண்ணாறு படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால் கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும் பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல் பொருள் : ஆன்மாவின் அழகைப் பார்த்து மற்றவர் கண் வைத்துவிடுவர் என நான் அஞ்சுகிறேன் எனவே திருஷ்டி கழிக்க வேணும் என எண்ணுகிறார் வள்ளல் எல்லார்க்கும் பெண்ணாசை பெரிதே எனில் -வானவர்க்கும் பெண்ணாசை பெரிது அல்ல – ஆன்மாவான ஆணுடன் கலக்கும் ஆசை தான் பெரிது எங்கிறார் எனவே அவர்க்கு ஆன்மாவுக்கு கண்ணாறு – திருஷ்டி சுற்றிப்போட வேண்டும் – எங்கிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.