Saturday, March 7, 2026

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 89

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 89 தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார் வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும் மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார் ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன் சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ பொருள் : தாயை விடவும் அன்பில் பரிவில் உயர்ந்து விளங்கும் என் தனித்தலைவராகிய என் கணவர் ஆகிய அபெஜோதியர் - நான் செய்த அருந்தவத்தாலே எனக்கு கிடைத்தார் சன்மார்க்கத்தார் கவனிக்க - தவம் - தவம் - " அன்னதானம் - ஜீவகாருண்ணியம் - தயவு "என்று நீங்கள் கற்பிதம் செய்துகொண்டிருப்பது போல அல்ல மனம் உரை - அறிவு ஆகிய எந்த விதத்தாலும் அந்த பொருளை அளக்க முடியா உயரிய நிலையில் இருப்பது அந்த பொருள் ஆயினும் எனக்கு எளியர் என என் அகத்திலும் புறத்திலும் என்னுடன் கலந்தார் - புறத்திலே கலந்த போது அவர் தேகம் ஒளியை நான் பெற்றுக்கொண்டனன் - ஆனால் அகப்புணர்ச்சி எப்படி நான் உரைப்பது ?? என வினாவுகிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.