Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
அனுபவ மாலை : பாடல் விளக்கம்
திருவருட்பா – ஆறாம் திருமறை
அனுபவ மாலை : பாடல் விளக்கம்
அம்பலத்தே திரு நடஞ்செய் அடிமலர் என்முடி மேல்
அணிந்து கொண்டேன் அன்பொடும் என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும் மலர்மணத்தை தோழி
என் உரைக்கேன் உரைக்க என்றால் என்னளவதுவன்றே
வம்பிசைத்தேன் அன்றடி என் அருகே இருந்துன்
மணி நாசி அடைப்பதனைத் திறந்து முகந்தறிகாண்
நம்புறு பார் முதல் நாத வரையுள நாட்டவரும்
நன்கு முகந்தனர் வியந்தார் நன்மணம் ஈதெனவே ( பாடல் 1 )
இந்தப் பாடலில் – வள்ளலார் தான் ஆன்ம அனுபவம் பெற்றுவிட்டதை உறுதிப் படுத்துகின்றார்.
ஆன்ம அனுபவம் வந்துவிட்டால் – உடம்பில் பல மணங்கள் வீசும் – குறிப்பாக கற்பூரம் மணம் உடலெங்கும் வீசும் – ஏனெனில்
ஆன்மா = கற்பூரம் ஆகும்
இந்த அனுபவம் எப்படி சித்தி அடைந்தது என்பதற்கு பதிலாக – மணி நாசி அடைப்பு திறந்தால் கிடைக்கும் –
அதாவது சுழிமுனை நுனி திறந்தால் , ஆன்மா அனுபவம் கிடைக்கும் என்று தோழிக்கு சொல்வது போல் நமக்கு பதிலுரைக்கிறார்.
மணி நாசி அடைப்பு = நடு நெற்றியில் இருக்கும் அடைப்பு , பிரமரந்திரத்தின் அடைப்பு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.