Saturday, March 7, 2026

ஞானிகள் ஒற்றுமை - 6

ஞானிகள் ஒற்றுமை - 6 ஞானிகள் கருத்து ஒத்துப்போவார்களே அல்லாமல் வேறு படவே மாட்டார்கள் ஆன்மாவின் பெருமை - வல்லமை வேதங்கள் உபனிடதங்கள் ஆன்மாவுக்கு நிகர் அது தான் - உலகத்தில் உள்ள எந்த பொருளும் அதுக்கு ஈடாகா - மக்கள் உள்ள செல்வம் சொத்து அனைத்தையும் கொடுத்தாலும் அதுக்கு ஈடாகா எங்கிறது இதையே தான் வள்ளல் பெருமானும் முன் மொழிகிறார் அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 29 ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார் அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர் மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென் கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே பொருள் : தன் தனிக்கணவராகிய ஆன்மாவை எப்படி எலாம் அழைக்கிறார் வள்ளல் பெருமான் பாருங்கள் ஐயர் - கண்ணில் இருப்பவர் தன்னை ஆளும் ஆளுடையார் அரும்பெருஞ்சோ தி = கிடைத்தற்கரிய பெரிய ஜோதி வடிவானவர் வெளியில் கூத்தாடும் ஆனந்த வடிவானவர் உண்மை ஆனவர் இப்படிப்பட்டவர் என்னை நிலா மண்டபத்தில் வைத்து என்னுடலில் கலந்தார் மணம் புரிந்தார் அதன் சாட்சியாக என் கையில் ஒரு காப்பு கட்டினார் கங்கணம் = பொன் ஒளி - மாற்றறியா பொன்னொளி - இன்னது மாற்று என்று அளவிட முடியா பொன்னொளி அது - அந்த ஆன்ம ஒளி தன் உடலில் கலந்தது என்று தன் ஆனமக்கலப்பு அனுபவம் பற்றிப்பாடுகிறார் அதன் தரத்தை என்னால் கூற முடியாது "உலகமும் வானமும் அதுக்கு சமமாகா அதன் மதிப்பு அத்தகையது" ஆன்மாவின் பெருமையை உணர்வோம் - அதாக நாம் வாதம் ஆவோம் -இனிமேல் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.