Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 50
BG Venkatesh / July 5, 2018
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 50
ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே
பொருள் :
மனமாகிய என் தோழியே – நீ என்னை விட்டு விலகி நிற்கும் போது என் நிலை காற்றறியா தீபம் ஆம்
அது போல் என் சிந்தை அசைவு காணா நிற்கும்
அந்தத் தருணம் நான் அடையும் நிலை கிடைக்கப்பெறும் அனுபவம் என்ன காண் மனமே ??
உலக அண்ட பகிரண்டம் காணா மிகப்பெரிய ஜோதி – சுழுமுனை உச்சியில் தோன்றி அதன் நடுவே பொன்னொளி தோன்றி அதன் நடுவே அருள் ஒளியாம் வெள்ளொளி தோன்றிற்று எங்கிறார்
இதில் எல்லா அனுபவமும் அடக்கி விடுகிறார் வள்ளல் பெருமான்
ஆன்ம ஜோதி – அதனுள் அருட்பெருஞ்ஜோதி என எல்லாம் கூறிவிடுகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.