Friday, March 6, 2026

நெற்றிக்கண் திறக்கும் வழி - பாகம் 5

நெற்றிக்கண் திறக்கும் வழி - பாகம் 5 வள்ளலார் உரை நடையில் கூறியிருப்பதாக அவரது அணுக்க தொண்டர்களால் பதிவு செய்யப்பட்ட தகவல் : " �நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆச்சாரியன் அனுக்கிரத்தால் திறக்கப் பெற்றுக்கொள்வது நலம் " . இதன் பொருள் யாதெனில் : ஆச்சாரியன் = குரு என்பவர் ஆவார் . அப்படியெனில் குரு என்பவர் யார்: யார் குருட்டினை நீக்குபவரோ , அவரே குரு. " குருட்டினை நீக்கும் சத்தி கண்மணிகளுக்கு உண்டு." அப்படியெனில் வள்ளலார் முகத்திலிருக்கும் கண்மணியாகிய குருவைக் குறிப்பிடுகின்றாரே அல்லாமல் புறத்திலிருக்கும் ஒரு மனிதர் அல்ல என்பதை சன்மார்க்கத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் வள்ளலார் தன் மெய்யருள் வியப்பு 28 ஆம் பாடலில் : என் கண்மணியுள் இருக்கும் தலைவா - நின்னைக் காணவே என்ன தவம் செய்தேன் முன் அரியும் அயனும் நாணவே இதனைப் புரிந்து கொள்ளாமல் மூத்த சன்மார்க்கத்தவரும் மற்றும் பலரும் , இந்த கண் பயிற்சியை நம்புவதே இல்லை - இது வள்ளலார் பயிற்சியே அல்ல என்று வள்ளலார் space இணையதளத்தில் எழுதி வருகிறார்கள் உண்மை தெரியக்கூடாது என்பதைக் காட்டிலும் , மற்றவர்கள் பெயர் வாங்கிவிடக் கூடாது என்பதில் மிக கவனத்துடன் இருக்கிறார்கள் ஆனால் இதில் உண்மை இருக்கிறது - அன்பர்கள் சோதித்து தெரிந்து கொள்ளலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.