Friday, March 6, 2026

பசி தூக்கம் ஒழிக்கும் தந்திரம் 2

பசி தூக்கம் ஒழிக்கும் தந்திரம் 2 விஞ்ஞானத்தின் அணு சமன்பாடு E = MC2 அதாவது அணு உலையில் , ஆற்றல் = பொருளின் எடை X ஒளியின் வேகமாகிய 1, 86, ,000 மைல் ஒரு நொடிக்கு இதன் பொருள் : அணு உலையில் ஒரு கிராம் யூரேனியம் சக்தியாக மாற்றப்பட்டால் அது வெளிப்படுத்தும் ஆற்றல் – 10 லட்சம் டன் TNT வெடி மருந்தை வெடித்தால் கிட்டும் ஆற்றல் ஆம் நம் தவத்தால் நம் வயிறை அணு உலையாக மாற்றம் செயணும் அப்படி செய்து , அதை வெடிக்க செய்தால் புற உலையில் கிடைக்கும் சக்தி நமக்கும் கிடைக்கும் என்பது உறுதியாகுது ஆன்மாவும் அணு தான் விந்துவிலும் அணு இருக்கு அதை அமுதமாக மாற்றும் வகை அறிவார்க்கு இது சாத்தியமே எப்படி ஆற்றுவது ?? ஒரு துளி அமுதம் நம் உடலில் பாய்ந்தால் போதும் , ஆன்ம சாதகர்க்கு பல்லாண்டுகள் தூக்கம் பசி இல்லாமலே தவத்தில் இருக்க முடியும் எல்லாம் வித்தை தவத்தில் இருக்கும் சூக்குமம் இது ஒன்றே தான் பசி தூக்கம் ஒழிக்கும் தந்திரம் ஆகும் இதன் பிரமாணம் : மணிமேகலை கதை அவள் ஆபுத்திரன் கை இருந்த அமுதசுரபி எனும் அக்ஷய பாத்திரம் கொண்டு அன்னதானம் செய்து வருகிறாள் அவள் கையால் உணவு வாங்கி சாப்பிட்டால் தான் காயசண்டிகை எனும் தேவலோக பெண் பெற்ற சாபம் நீங்கும் அவள் பெற்ற சாபம் விருச்சிகன் எனும் முனிவன் 12 ஆண்டுக்கு ஒரு முறை உருவாகும் அபூர்வ மாங்கனி உண்டு 12 ஆண்டுகள் பசி எனும் நோய் இல்லாமல் தவம் செய்து வருவான் அந்த ஆண்டு மலர்ந்த அந்த கனியை காய சண்டிகை காதல் மோகத்தால் காலால் நசுக்கி பாழ் ஆக்கிவிடுகிறாள் அந்த முனிவன் அவளுக்கு தீராத பசி எனும் யானைப்பசி நோய் சாபமாக கொடுத்து விடுகிறான் அது மணிமேகலை கையால் அமுதசுரபி எனும் பாத்திரத்தில் வரும் அன்னத்தால் நீங்கும் என்கிறான் உலகில் எங்காவது ஒரு கனி 12 ஆண்டுக்கு பசி தீர்க்குமா ?? அது புறத்தில் இருக்கும் மாங்கனி அல்ல அந்த கனி ஆன்மா – அமுதம் தான் ஆன்மாவிலிருந்து ஊறும் அமுதம் பல்லாண்டுகள் பசி தீர்க்கும் ஆகையால் , இதிகாசம் புராணம் எல்லாம் கட்டுக்கதைகள் அல்ல யோக ஞானம் அனுபவங்களின் வெளிப்பாடு அதை புறந்தள்ளினால் நட்டம் நமக்குத் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.