Monday, March 23, 2026

பூணூல் கல்யாணம் தத்துவ விளக்கம் 2

பூணூல் கல்யாணம் தத்துவ விளக்கம் 2 உண்மை சம்பவம் – கோவை 2023 பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும் நான் இந்த மாதம் அபார்ட்மெண்ட் நண்பர் மகன் உபநயனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் உன்னிப்பாக கவனித்து வந்தேன் 1 முதல் நிகழ்ச்சி : பூணூல் அணிவித்தல் இது முப்புரி நூல் அதாவது உள் தவ அனுபவத்திலே முத்தி அனுபவம் – காசி- திரிவேணி சங்கம் அடைய வேணும் என வலியுறுத்தும் சடங்கு அடி அனுபவம் வாசி அனுபவம் ஆம் 2 பின்னர் பிரம்ம உபதேசம் சந்தியா வந்தனம் – காயத்திரி மந்திரம் உபதேசம் – புறத்திலே அகத்திலே சூரிய சந்திர கலைகள் ய காரத்தில் சேர்த்து ஆன்ம ஜோதி வணங்குதல் அதனால் தான் அவர் மஞ்சள் ஆடை ( குரு ஆகிய ஆன்மா – தக்ஷணாமூர்த்தி ) அணிந்து இருக்கார் அங்கு / அது நோக்கி புனித யாத்திரை செய்கிறார் அவர் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் – துறவு /வி மாதிரி நாளைக்கென சேமிப்பு எண்ணம் இருக்க கூடாது இன்றைய வருமானம் இன்றே செலவு சதா இறை சிந்தனை வேத சாத்திரம் – பிரம்மம் ஆய்வு தவம் அனுபவம் என வாழ்க்கை வாழணும் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் - ஏன் இவ்வாறு என திரும்ப திரும்ப யோசித்தேன் ?? ஏனெனில் ?? எல்லாவற்றையும் விட்டு சதா இறை சிந்தனையாக இருந்தால் மட்டுமே பிரம்மம் அறிய முடியும் – ஞானம் கிட்டும் என்பதால் இந்த மாதிரி வாழ்க்கை வாழணும் என்ற கோட்பாடு வைத்திருக்கார் வள்ளல் பெருமான் உரை நடையில் : எல்லாவற்றையும் விட்டதால் அடைந்த பயன் என்று கூறியதன் பின்னணியை உண்மையாக உணர்ந்தால் , இதன் முழு பரிமாணம் விளங்கும்
ஏனெனில் இந்த உலகப்பொருள் யாவுமே அந்த பிரமத்துக்கு ஈடாகாது – அதுக்கு கால் தூசுக்கும் சமம் ஆகாது என்பதால் – அதை இறுகப்பிடித்து இருத்தல் புத்தி சுவாதீனமற்றவர் செயல் என்றெண்ணி இதை துறக்கிறார் இறுகப் பற்றி இருந்து ஒரு பயனுமின்று வீண் காலம் பிறவி தான் இந்த விழா என் வாழ்வில் ஒரு திருப்புமுனை தான் எனக்கு பலப்பல உண்மைகளை விளக்கியது நம் வாழ்வில் நடப்பவைகள் எல்லாம் தற்செயல் அல்ல எல்லாம் திட்டமிட்டே நடக்குது நம்மை அறிவு நிலையில் மேலேற்ற திட்டம் இட்டே நடக்குது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.