Monday, March 23, 2026

பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும்

பூணூல் கல்யாணம் – சடங்கும் – உண்மை தத்துவ விளக்கமும் நான் இந்த மாதம் அபார்ட்மெண்ட் நண்பர் மகன் உபநயனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் உன்னிப்பாக கவனித்து வந்தேன் முதல் நிகழ்ச்சி : பூணூல் அணிவித்தல் இது முப்புரி நூல் அதாவது உள் தவ அனுபவத்திலே முத்தி அனுபவம் – காசி- திரிவேணி சங்கம் அடைய வேணும் என வலியுறுத்தும் சடங்கு அடி அனுபவம் வாசி அனுபவம் ஆம் பின்னர் பிரம்ம உபதேசம் சந்தியா வந்தனம் – காயத்திரி மந்திரம் உபதேசம் – புறத்திலே அகத்திலே சூரிய சந்திர கலைகள் ய காரத்தில் சேர்த்து ஆன்ம ஜோதி வணங்குதல் அதனால் தான் அவர் மஞ்சள் ஆடை ( குரு ஆகிய ஆன்மா – தக்ஷணாமூர்த்தி ) அணிந்து இருக்கார் அங்கு / அது நோக்கி புனித யாத்திரை செய்கிறார் அவர் பிச்சை எடுத்து வாழ்க்கை வாழ வேணும் - துறவு /வி மாதிரி நாளைக்கென சேமிப்பு எண்ணம் இருக்க கூடாது இன்றைய வருமானம் இன்றே செலவு சதா இறை சிந்தனை வேத சாத்திரம் – பிரம்மம் ஆய்வு தவம் அனுபவம் என வாழ்க்கை வாழணும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் இவ்வளவு ரகசியத்தையும் ஒரு சடங்கில் கூறிவிட்டார் சடங்கு உண்மை புரிந்து செயலாற்றணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.