Saturday, March 7, 2026

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 11

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 11 கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான் எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர் உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய் அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால் அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே. பொருள் : கள் ஆகிய அமுதம் உண்டாள் எனக்கூறுகிறார் மக்கள் – பனையில் 3 கண் இருப்பதால் அது கள் தருகிறது – அதே போல் மூன்று கண் அகத்தில் சேர்த்தால் அது அமுதம் உற்பத்தி செய்யும் கண்கள் மேலேறி – சொருகி நின்றால் அது ஒரு வித போதை தரும் – அதை கள் எங்கிறார் வள்ளல் பெருமான் பொற்சபையில் தான் சிவத்தை கண்டதும் – சிற்சபையில் தான் அதை அனுபவித்ததும் பற்றி பேசுகிறார் வள்ளல் உலக மக்கள் அருந்தும் கள் மன மயக்கம் கொடுக்கும் வல்லது ஆனால் நான் உண்ட கள் ஆனது அறிவு விளக்கம் தரும் – தெளிவு தரும் என்று வேறுபடுத்திக்காட்டுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.