Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
Multiverse theory – பல் அண்டம் கோட்பாடு
இதிகாசம் புராணம் பெருமை உண்மை
Multiverse theory – பல் அண்டம் கோட்பாடு
இதை விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் முன்னரே உலகுக்கு தெரிவித்த து நம் வேத காலத்து ரிஷிகள் ஞானியர்
பாகவத புராணம் :
ஒரு முறை பிரம்மா , ஸ்ரீ கிருஷ்ணரைக் காண அவர் இல்லம் தேடி வந்தாராம்
வந்து காவலாளியிடம் , நான் பிரம்ம தேவன் வந்திருக்கேன் – அவரைக்காண வேண்டும் என போய் சொல் என்றார்
அவரும் போய் சொல்ல,
கிருஷ்ணனும் : எந்த பிரம்மன் ?? என கேட்க , பிரம்மனும் , நான் தான் ஒரே பிரம்மன் உலகை படைக்கும் பிரம்ம தேவன் என பதில் அளிக்கவும் , பின்னர் கிருஷ்ணனும் எல்லா அண்டங்களிலும் இருக்கும் பிரம்மன்களை அழைத்து காட்டவும் , பிரம்ம தேவன் முன் கோடிக்கணக்கான பிரம்மன்கள் வந்து குழுமி விட்டார்கள்
அவர் வாயடைத்து போய்விட்டார்
எண்ணில் அடங்கா அண்டம் – அத்தனைக்கும் படைத்து காத்து அழிக்கும் தலைவர்கள் உளர் என கிருஷ்ணர் கூறி , அவர்க்கு தெளிவு அளித்தார் என புராணம் உரைக்குது
இது ஒன்றும் பொய்யல்ல
இதிகாசம் புராணம் கட்டுக்கதை அல்ல
இதைத்தான் வள்ளல் பெருமானும் தன் அருட்பாவில் எப்படி பாடுகிறார் ??
அருட்பா ஆறாம் திருமுறை அனுபவ மாலை
உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே 63
இந்த அருட்பாடல் வரிகள் – பல் அண்டங்கள் கோட்பாட்டை நிரூபிக்குது
அதாவது பல கோடி அண்டங்கள் பால்வெளியில் உள்ளன
அதில் ஒவ்வொரு அண்டத்துக்கும் தனித்தனி படைக்கும் காக்கும் அழிக்கும் தலைவர் என ஐந்தொழில் தலைவர் நியமித்து அருளாட்சி செய்து வருவது அபெஜோதி
ஆக சமயமும் சன்மார்க்கமும் இல்லை சுத்த சன்மார்க்கமும் எப்படி ஒத்துப்போகுது பார்க்கவும் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.