Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 40
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 40
பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
பொருள் :
36 தத்துவங்கள் - மண் முதல் நாதம் கடந்தும் - அதன் அப்பாலும் பர நாதம் கடந்தும் - அருளாட்சி நடத்தும் அபெஜோதி பெருமை அறிந்தார் அவரை புகழ்கின்றார் - அவர் அன்பு என்ற ஒன்றை மட்டுமே குறித்து பார்க்கின்றார்
வேறெதுவும் நோக்கவிலை
ஆதலால் அவரிடத்து அன்பு பூண்டிருப்பவர் யாரும் என் உறவினர் ஆவர் - இது என் மீது சத்தியம் - நீயும் என் உறவாய் என் தோழி என்று உலகுக்கு அறிவிக்கிறார் தன் தோழி மூலமாக
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.