Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
ஆன்ம தரிசனம்
வேணுமே மயிர்ப்பாலம் நெருப்பாறேக
மெய்வலுவில் ஊசிமுனை வாசியேறத்
தோணுமே நாமிருந்த இடங்கள் தானும்
தொந்தத்தோம் என்றாடிடுமே சுலபமாக
காணுமே தீபவொளி கருத்துங்காணும்
கள் கஞ்சாக்கொண்டது போல மயக்கங்காணும்
வீணுமேயாகாது மயக்கம் வேண்டாம்
வேதாந்தம் கண்டிடலாம் வாசிபாரே
அதாவது ,
வாசியானது மயிர்ப்பாலம் நெருப்பாறு கடந்து ஆன்ம நிலையம் அடையும் போது கள் கஞ்சா அடித்தாற் போல் மயக்கம் தரும்
அதனால் பயிற்சி வீணா ? என கலக்கம் வேண்டாம்
வாசி அனுபவத்தில் நின்றபடி இருப்பாயாக
தீபவொளி = ஆன்ம ஜோதி
வேதாந்த வீடு = வெட்ட வெளி - ஆன்ம நிலையம்
தக்க குரு துணையுடன் பயிற்சி அறிந்து செய்ய வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.