Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
சுழுமுனை பெருமை
சுழுமுனை பெருமை
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
ஆனாலே பொழிகாணும் புலன்கள்தோனும்
ஆகாத கருவிகளும் அடங்கிப்போகும்
போனாலே கற்பூர வாசம் வீசும்
பொங்கு திரை மேலெழும்பும் மாய்கை போகும்
வாணாளை ஏற்றிவிடும் புருவமத்தி
வாசி கொண்டு நீட்டிவிடும் நாசிமத்தி
தானாலே ஆகிடலாம் திறக்கப்பூட்டத்
தந்திரங்கள் வேணுமப்போ சரங்கள்பாரே
பொருள் :
சுழுமுனை உச்சிக்கு ஏறிவிட்டால் , கருவி – புலன்கள் அடங்கிப்போகும்
தேகத்தில் கற்பூர மணம் வீசும்
உடலில் சுருக்கம் போகும் – இளமை திரும்பும்
மாயா மறைப்பும் போய் ஒழியும்
சாதகன் ஆயுள் அதிகரிக்கும்
அதனால் வாசி பார்த்த வண்ணம் இருப்பாயாக
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.