Tuesday, March 3, 2026

அகத்தியர் பர ஞானம் 1000

அகத்தியர் பர ஞானம் 1000 ஆச்சென்ற தற்பரத்தை யார் தான் கண்டார் ?? ஆயி பராபரை தாயை தானார் கண்டார் ?? பாச்சென்ற பரமன் பாதம் யார் தான் கண்டார்?? வாச்சென்ற ஆதி வஸ்துவை யார் தான் கண்டார்?? இயம்பினதோர் பதி பசு பாசம் கண்டாரே மெய்ஞ்ஞான சொரூபம் கண்டாரே விளக்கம் : ஆர் தான் சுய தரிசனம் கண்டார் ?? ஆர் தான் பராபர வெளி விளங்கு அம்மை கண்டார் ? ஆன்மாவின் பாதம் ஆர் தான் கண்டார்?? அழியா ஆதி பொருளாம் ஆன்மாவை ஆர் தான் கண்டார்?? பதி பசு பாசம் தம் கண்ணால் கண்டவரே ஆன்மாவைத் தம் கண்ணால் கண்டவர் ஆவர் மூன்றும் ஒரே இடத்திலே இருக்கு என்பதை சூசகமாக தெரியப்படுத்துகிறார் சித்தர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.