Thursday, March 5, 2026

திருவடி தவம் – அனுபவங்கள் Updated till July 2025

திருவடி தவம் – அனுபவங்கள் Updated till July 2025 All my experiences 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ் காலத்தில் வாழ்வர் கவலை – பயம் இருக்காது 6 ஆன்மா தன் குணங்களை ஜீவன் ஆகிய நம் மீது பிரதி பலிக்கும் 7 ஒருமையில் இருப்போம் இரவு பகல் வெற்றி தோல்வி இன்பம் துன்பம் எல்லாம் போய்விடும் – 8 வருங்காலம் – நிகழ்வுகள் எல்லாம் ஆன்மா காட்டும் – வசனம் மூலம் தெரிவிக்கும் 9 சுவாசம் விடா வாழ்வு வாழ வைக்கும் மிக குறைந்த சுவாசம் தான் தேவை ஆக இருக்கும் 10 சுவாசம் மேல் ஏறி நிற்பதால் விந்து விடா பெண் போகம் சித்திக்கும் ஆனால் இன்பம் பன்மடங்கு இருக்கும் இது உண்மை – 11 நம் விதியை வினைகளை தீர்த்துக்கொள்ளலாம் தள்ளி வைக்கலாம் திருத்திக்கொள்ளலாம் 12 மன விகாரம் குறைந்து கொண்டே வரும் – நாம் சிறிது சிறிதாக உத்தமனாக மாறுவோம் – புருஷோத்தமனாக மாறுவோம் 13 நம் குணத்தில் மாற்றம் நிகழும் – அதாவது பொறுமை நிதானம் எல்லாம் வரும் 14 நமக்கு பிறர் மீது கருணை நேசம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் இது மிக முக்யமான அனுபவம் ஆம் இது தயவுக்கு கூட்டிச்செல்லும் 15 மற்றவர் படும் துன்பம் துயர் எல்லாம் நம்மால் அவர் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும் 16 உடலில் இருக்கும் கழிவுகள் தவம் செயும் போது வெளியேறும் – இது மூக்கில் உதட்டில் ஏற்படும் அரிப்பால் புரிந்து கொள்ளலாம் 17 விழிப்புணர்வு அதிகமாகிக்கொண்டே வரும் இது உடலைக்கட்டுப்படுத்தும் தந்திரம் ஆம் இது ஆன்மாவின் செயல் ஆம் 18 உள்ளதை உள்ளபடி அறியும் தன்மை வரும் – மனம் – உலக வாழ்வு – உறவுகள் இதில் அடக்கம் 19 பர உதவிகள் – ஞானிகள் – காட்சியும் உதவியும் நமக்கு கிடைக்கும் 20 உடலில் இருந்து மலர் – கனி வாசம் வீசும் – இது விந்துவில் தவத்தால் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் ஆம் 21 இறை நம்மைக்காக்க ஒரு காவலை வைத்துவிடும் அவர் நம் கூடவே இருப்பார் 24*7 சூக்குமத்தில் 22 மனதில் சஞ்சலம் இருக்காது – தைரியம் இருக்கும் 23 நாம் முழுமை என்ற உணர்வு வந்துவிடும் – அதனால் மற்றவர் மேல் பொறாமை இருக்காது – ஒப்பீடும் இருக்காது 24 மனம் அசைவை ஒழித்து நிற்கும் சுவற்றில் ஆணி அடித்த படம் போல் 25 தாரணை அனுபவம் சித்திக்கும் – அதாவது 100 எண்ணம் போய் “ ஒரே எண்ணம் சீராய் ஓடும் “ இது பதஞ்சலி யோகத்தின் ஆறாம் படி 26 பொருள்/ நேரம்/ சக்தி/ உடல் அசைவில் எல்லாம் சேமிப்பு பார்க்கும் 27 வாழ்வில் ஒளிமயமான பக்கம் பார்க்க ஆரம்பிக்கும் 28 விழிப்புணர்வு உடலில் எங்கும் பரவி நிற்கும் 29 வெப்பத்தால் உதடு கண் எரியும் – உதடு காய்ந்து போம் 30 ஒரு வித அமைதி கிட்டும் – அது உபசாந்தம் ஆம் 31 மன மயக்கங்கள் குறைந்து கொண்டே வரும் 32 நம் வாழ்வின் பொறுப்பு ஆன்மா தன் கையில் எடுத்துக்கொள்ளும் அதனால் எல்லாம் சரியான பாதையில் செல்லும் 33 நம் வாழ்வின் செயல்பாடுகள் எல்லாம் பயனுள்ளதாகத்தான் இருக்கும் வீண் என்ற சொல்லே இருக்காது 34 Our Productivity , Efficiency and Utilisation of resources – Time Money Utilities will increase manifold 35 பதஞ்சலி யோகத்தின் 7 ம் படியான “ தியானம் “ – எண்ணமிலா நிலை சித்திக்கும் மனனமிலா நிலை சித்திக்கும் 36 உருவம் எலாம் கரைந்து அருவ நிலை அனுபவம் சித்திக்கும் அப்போது மனதால் இயங்க முடியாது மனம் உருவம் பற்றித்தான் செயல்படும் 37 கண்மணி வல்லபத்தால் மனம் அடங்கிக் கொண்டே வரும் 38 சாதகன் வீரன் ஆக மாறிக்கொண்டே வருவான் – வீரமிக்க மணியால் – விந்து ஆகிய மணியால் 39 பார்வை நோக்கம் குறுகியதிலிருந்து – கண்டத்தில் இருந்து அகண்டமாக விரிவடையும் எல்லாம் மிக அற்பமாக தோன்றும் 40 உடலை அருள் ஒளியால் காயகல்பம் செய்யும் தேய்ந்து போன ராஜ உறுப்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வலு சேர்க்கும் அதன் வாழ் நாளை நீட்டிக்கச் செயும் 41 பந்தம் அறுத்துக்கொண்டே வரும் உலகத்துடன் ஒட்டா நிலை வாழ்வு வரும் 42 ஆயுள் நீட்டிப்பு அளிக்கும் தகுதி இருப்பின் 43 சூக்கும உடலை ஸ்தூல உடலில் இருந்து பிரித்து சிகிச்சை அளிக்கும் ஒளி அணுக்களை சீர் செய்து உடல் நலத்தை சரி செய்யும் 44 பசி தூக்கம் காமம் பெண் போகம் எல்லாம் அதிகமாகி உச்சத்துக்கு சென்று – பின் அடங்கிவிடும் – நாதத்தின் சகாயத்தால் 45 பொது நோக்கம் கைகூடும் எல்லவரும் உயிர் என்ற பொது நோக்கம் - உறவு எலாம் நீங்கி 46 கற்பகம் எனும் மனோ நிலை சிறிது சிறிதாக சித்திக்கும் நினைத்தது – வாய் உரைத்தது எலாம் நடக்க ஆரம்பிக்கும் 47 எண்ணம் சொல் கட்டுப்படுத்தும் 48 சரியை கிரியை கழற்றும் – ஈடுபாடு விருப்பம் காட்டாது 49 பேச்சு குறைக்கும் – மௌனம் விழையும் 50 மனதின் குணமாகிய காட்சி – குரல் ( ஒளி – ஒலி ) அடங்கிவிடும் இதனால் இன்னம் அமைதி வந்துவிடும் 51 நமக்கும் உலகத்துக்கும் தூரம் அதிகமாகிக்கொண்டே போகும் ராக்கெட்டில் விண் சென்றால் எப்படி இருக்குமோ அவ்வாறிருக்கும் 52 ஆகாயம் எப்படி எதனுடனும் தொடர்பற்று நிற்குதோ ? அவ்வாறு நாமும் எதனுடனும் தொடர்பு இல்லாமல் நிற்போம் 36 வரை கழற்ற தயாராகும் நிலை ஆன்மா தனிக்குமரி அல்லவா ?? அதான் ஆன்ம சாதகனும் தனித்து – தத்துவ துரிசு அற்று நிற்க வைக்கும் ஆன்மாவுக்கு சம நிலை அடைய வைப்பதுக்கான முன்னோட்ட நிலை – அனுபவம் 53 கணவன் விருப்பத்துக்கேற்றவாறு மனைவி எப்படி தன்னை மாற்றிக்கொள்கிறாளோ ?? அவ்வாறே ஆன்மாவும் தனக்கு ஏற்றவாறு – தனக்கு ஈடாகுமாறு , நம் வாழ்வு மாற்றி அமைக்கும் 54 நீண்ட தவம் புரியவும் – 3 மணி நேரம் போல் ஒரு அமர்வில் தொடர் தவம் புரியவும் உடல் /மனம் – பலம் தெம்பு உறுதி உற்சாகம் ஊக்கம் அளிக்கும் 55 தவ அனுபவம் அந்த நேரத்தில் மட்டும் இல்லாது – சகஜமாகவே இருக்கும் போதும் தொடரும் அப்போதும் மனம் அமைதியாக அடங்கி இருக்கும் 56 முப்பூ அனுபவத்தால் உடல் தணல் போல் ஆகிவிடும் அப்போது அவர் அந்தணர் ஆவர் அந்தணர் ஆவது – சடங்கால்/பிறப்பால் அல்ல – தவத்தால் 57 நாத விந்து கலப்பால் மாற்றிப்பிறக்க வைக்கும் 58 சும்மா இருக்கவே விரும்பும் - அசைவு விரும்பாது உடல் மன அசைவு விரும்பாது 59 எலும்பு உருகும் - நெகிழும் – மென்மை அடையும் அதனால் உடல் காயசித்தி காயகல்பம் அடையும் இது பல சித்திக்கு வழி கோலும் 60 சாதகன் நல்ல மருந்து , ஞான மருந்தின் அருமை சிறப்பு பெருமை உணர்வான் அது ஆற்றும் அற்புதங்களைக் கண்கூடாக காண்பான் நூல் அறிவு அனுபவமாக பார்ப்பான் 61 “ நினைவு எனும் பறவையின் சிறகை வெட்டிவிடும் “ அதனால் அமைதி அமைதி பேரமைதி தான் 62 சன்மார்க்க ஸ்லோகம் : அசதோமா சத்கமய படி பொய்யாகிய உலகத்தில் இருந்து நம்மை உண்மைக்கு இட்டு செல்லும் மனதின் உலகத்தின் உண்மை முகம் உணர்வோம் 63 உந்தீபற –உள் தீ பறக்கும் மூலாக்கினி உருவாகும் 64 மனம் வெற்றுப்புத்தகம் நூல் போல் ஆகிவிடும் ( Empty Book ) சித்தர் /வள்ளல் பெருமான் மொழி : எழுதா மறை மாதிரி ஆகிவிடும் மூளை மனம் ஒன்றுமிலா வெளி என்ற நிலை உருவாகும் 64 மனம் Boomerang மாதிரி சிறிது தூரம் செல்லும் – மீட்டும் நம்மிடம் வந்து சேர்ந்து விடும் மன அடக்கத்துக்கான அறிகுறி 65 நினைவாற்றல் மிக கூர்மையாக இருக்கும் 66 சித்த மலம் அறுக்கும் 67 முதல் நிலை அமுதம் உருவாகும் – உடல் முழுதும் பரவும் குறிப்பாக முதுகு – கால் அடி இது பிரபஞ்சப் பேராற்றல் கிரகிப்பால் சித்தி ஆதல் மிக குளிர்ச்சியாக இருக்கும் நல்ல கிளர்ச்சியாக இருக்கும் 68 உறக்க நிலையிலும் விழிப்புணர்வு அளிக்கும் அது தூங்காத தூக்கம் ஆகும் 69 எப்படி அக நிகழ்வுகள் பாரபட்சமின்றி கவனிக்கிறோமோ ?? அப்படியே புற உலக காட்சிகள் நிகழ்வுகளையும் ஒரு பார்வையாளன் போல் பாரபட்சமின்றி – “ நடக்கட்டும் “ என பார்க்கும் மனோ பாவனை வந்துவிடும் போதம் ஒழிந்து விடும் 70 சித்த்தில் பதிவுகள் நீக்கும் – முன் ஜென்ம கன்ம வாசனைகள் நீக்கிக்கொண்டே வரும் அதனால் மௌனம் கிட்டி நிட்டை கூடும் 71 வினைக் கழிவு முதலில் சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்த வினை , முற்றிலுமாக நீக்கி விடும் 72 சாதகனுக்கு தெரியாத விஷயத்தை தனிப்பாடமாக நடத்தி தெரிய /புரிய வைக்கும் சாதகனின் அறிவு ஆடையில் எங்கெங்கு துவாரம் இருக்கோ அங்கெல்லாம் அடைத்து , முழுமை அடையச்செயும் அதுக்கு ஏதாவது ஒரு வழி கையாண்டு பாடம் நடத்தும் வீடியோ , நூல் , மக்கள் பேச்சு – உரையாடல் என பல்வகையிலும் பாடம் நடக்கும் 73 சாதகனின் விண்ணப்பத்தை சிலதை கேட்காமலே கொடுக்கும் , செயும் – சிலதை கேட்டால் தான் கொடுக்கும் செயும் 74 அசைவு ஒழிந்து வருங்கால் , ஜீவன் ஆன்மாவுடன் இசைந்து செயல்படும் ஆன்மாவுடன் கருத்து ஒருமித்து நடக்கும் அது இயற்கை ஆன்மாவுக்கு அடி பணியும் - அடங்கி செயல்படும் அதன்படி நடக்கும் – எதிர்க்காது – அசுரர் போல் Psyche will align with Higher Self n Dimensions It falls in line with Atman 75 எல்லாம் சிவமே ஆற்றுது எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும் இதெல்லாம் எண்ணத்தின் பெருமை 76 பாசம் சிறிது சிறிதாக விலக , ஆன்ம சாதகன் நோக்கு பதி நோக்கி அமையும் . தெளிவு நாளுக்கு நாள் அதிகமாகியபடி இருக்கும் 77 முன்பு : ஐம்புலன்களும் தம் விருப்பப்படி இயங்கும் இந்நிலை மாறி , இப்போது நம் அனுமதி கேட்கும் கண் : இந்த அழகான பெண்ணை பார்க்கலாமா ?, நம் அனுமதி கிடைத்தால் தான் பார்க்கும் இலை எனில் அடங்கிய படி இருக்கும் 78 தவத்தால் ஐம்புலன் களும் அட்டை கத்தி போல் , வெற்றுப்புலன் போல் ஆகிவிடும் Gun without bullets 79 எட்டிரெண்டு கூடுவதால் முகம் ஒளி வீசும் – பிரகாசமாக இருக்கும் மக்கள் கூறுவர் 80 ஒரு அனுபவம் வருமுன் சினிமாவில் காட்டப்படும் trailer teaser மாதிரி , முன்கூட்டி காட்டி , பின் அது நடத்திக்காட்டும் 81 வினை / நோய் தீர்ப்பதில் படிப்படியாக செய்யும் – 75 % , 90% பின் 100 % என நடத்தும் 82 தன் நிலை தரம் தன் தலைவன் நிலை தரம் அறிய/உணர வைக்கும் . ரெண்டுக்கும் தூரம் எவ்வளவு ?? தன் சக்தி திறம் இவ்வளவு தான் என உணர வைக்கும் 83 கற்றுக்கொடுக்கும் போதும் கூட புது புது விளக்கங்கள் கொடுக்கும் தெளிய வைக்கும் வாயிலிருந்து அவனை அறியாமலே விளக்கங்கள் தானே வரும் பின்னர் அது கண்டு வியப்படையச் செயும் 84 பிரம்மம் அடைய தகுதி ஆகுமாம் 1 நிகழ் காலத்தில் வாழ்தல் நாளை பத்திய சிந்தை இல்லாதிருத்தல் 2 தனக்கு தேவைக்கு மேல் வைத்துக்கொள்ளாமை 3 சேமித்து வைக்காமை 4 இன்றைக்கு தேவை மட்டுமே சிந்தை இருப்பது 5 சரணாகதி இந்த குணங்கள் பிரதிபலிக்கும் 85 சாம்பவி – கேசரி கண்மணிகள் மேலேறுவது அறிவது எப்படி எனில் ?? கண் மேலேற மேலேற , தரை மீதிருக்கும் பொருட்கள் கண்பார்வையில் இருந்து மறைந்துவிடும் இந்த அனுபவம் வைத்து இதை அறிந்து கொள்ளலாம் 86 தணல் ஆம் சுத்த உஷ்ணம் உண்டாக உண்டாக , தவத்தால் ஊதுவதால் அந்த உஷ்ணம் பெருகியபடி இருக்கும் அது நம் மரபணுவை மாற்றும் அப்போது உடல் சோர்வு மிக மிக அதிகமாக இருக்கும் தூக்கம் மிக அதிகமாக வரும் சாதகர் அஞ்சவோ பயப்படவோ கூடாது சாதனம் தொடரணும் 87 சுத்த உஷ்ணத்தால் உடல் தணலாக இருக்கும் போது நடக்கும் மரபணு மாற்றத்தால் நாம் பூரணம் எனும் நிறைவை அடைவோம் பிரம்மம் பூரணம் முழுமை என்பதால் இந்த உலகப்பொருளால் கவர்ந்து இழுக்கப்பட மாட்டோம் வீடு வாகனம் சொத்து எல்லாம் கவராது இதை விட்டால் தான் பிரம ஞானம் – வித்தை கைவல்யம் எனும் போது – இந்த விந்து மாற்றம் இந்த மன மாற்றத்தை நிகழ்த்தும் 88 சஞ்சிதம் கருமம் காலி செய்து கொண்டே வரும் - இது திருவடி தவத்தின் உச்ச கட்ட அனுபவம் 89 பிடித்த நிறம் வண்ணத்திலிருந்து வெண்மைக்கு மாறிடும் வெள்ளை நிற பூக்கள் தயிர் சாதம் பிடிக்கும் வெள்ளை நிற ஆடை இதெலாம் கீழ் பச்சைத் திரை விலகல் அளிக்கும் மாற்றம் சாத்வீக குணம் மேலோங்கும் ராக துவேஷம் ஒழியும் 90 பயிற்சியின் ஒரு கட்டத்தில் , நம் அனுபவமாக ராமன் சிவ தனுசில் நாண் இழுத்துப் பூட்டியதைப் போல் கண் இழுத்து கட்டி இருக்கும் செருகி இருக்கும் 91 சக்தி சேமிப்புக்கு பிரதானம் அளிக்கும் எல்லாவற்றிலும் இதை பார்க்கும் எண்ணம் சொல் செல்வம் என எல்லாவற்றிலும் சக்தி சேமிப்பு பார்க்கும் Energy conservation will top the priority list 92 காலப்பயணம் செயும் வல்லமை கிடைக்கும் முற்காலத்தில் நடந்தது காணலாம் நெற்றிக்கண் தயவினால் Time travel possible . 3rd eye will help to this end என் அனுபவம் – ரெண்டு நடந்துளது 93 ஆன்மா தன் வல்லமையால் அருள் சகாயம் பெற்று , காலத்தை – கோள்களை மாற்றி அமைத்து வினை மாற்றி கெட்ட காலத்தில் கிரக தோஷத்தில் இருந்து நம்மை காக்கும் 94 கண்ணாடி தவத்தில் கண்களில் நீர் வருவது மாதிரியாக ரெண்டாம் கட்டப் பயிற்சியிலும் கண்களில் நீர் சொரியும் அது மிக அதிகமாக இருக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.