Monday, March 2, 2026

Salmon fish – சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – 3

Salmon fish – சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – 3 இந்த வகை மீன் மலை உச்சியில் நன்னீரில் பிறக்குது பின் , அது நீரின் வெள்ளோட்டத்தின் படி நீந்தி , கடலில் கலந்து , வாழ்கிறது உப்பு நீரில் வாழ கற்றுக்கொள்ளுது சுமார் 4/5 ஆண்டுகள் கடலில் வாழ்ந்த பின் , தான் எங்கு பிறந்தோமோ ?? எந்த நீர் நிலையில் பிறந்தோமோ ?? அந்த இடத்துக்கு எதிர் நீச்சல் அடித்து , மீண்டும் அங்கு வந்தடையுது அதுக்கு பல துன்பம் துயர் அனுபவித்தே வந்தடையுது – பல காலம் நீந்தி தான் வந்தடையுது அதுக்கேத்தாற் போல் , மீனுக்கு பலப்பல நதிகளின் / நீர் நிலைகளின் வாசனை அறிந்து , அதன்படியே திரும்பி வருமாம் தான் பிறந்த இடத்துக்கே தான் பிறந்த நதியின் வாசனை அறிந்து வைத்திருந்து அந்த இடத்துக்கே வந்தடைந்துவிடுமாம் வந்து , இனப்பெருக்கம் செய்து , குஞ்சு பொரித்துவிட்டு இறந்துவிடுமாம் அப்பா என்ன விந்தை ?? இயற்கை வினோதம் ?? இதை அறிந்து வைத்திருக்கும் கரடிகள் , அதன் திசையில் காத்திருந்து உண்டுவிடும் இவ்வாறு மனிதனும் செய்ய வேண்டும் என்பதை இயற்கை சூசகமாக எடுத்துக்காட்டுது இந்த மீன் மூலம் இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.