Monday, March 2, 2026

“ கடைத்தேறுதலும் கடைதலும் “

“ கடைத்தேறுதலும் கடைதலும் “ நீ கடைத்தேறுகின்ற வழி பார் “ நீ கடைத்தேற மாட்டாய் “ என்றெலாம் சமுதாயத்தில் பேச்சு வழக்கு இருக்கு கடைத்தேறுதல் எனில் கடை ஆகிய உச்சிக்கு மேலேறுதல் அதனுள் நுழைதல் தான் ஆனால் அது மிகவும் கடினமான காரியம் எளிதில் நடப்பதல்ல அதுக்கு உழைக்காமல் காசு சம்பாதிக்காமல் இருத்தல் அவசியம் என்னேரமும் தவமே கண் என இருக்கணும் உறக்கம் இல்லாமல் இருக்கணும் இது எப்படி உலக வாழ்க்கையில் சாத்தியம் ?? ஸாத்தியம் ஆகும் சாத்தியப்படுத்த வேணும் அது தான் சாலன தந்திரம் – பாற்கடல் கடைதல் பாற்கடல் ஆகிய விந்துவை கண் கொண்டு சாலனம் செய்தால் , ஆன்ம சாதகனுக்கு தேவையான எல்லா செல்வமும் அவன் கையில் அமுதசுரபி காமதேனு கற்பகத்தரு இது கொண்டு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து தவ வாழ்க்கையிலே கண்ணும் கருத்துமாக இருந்து தவத்தை முடிக்கலாம் கடைதல் இல்லாமல் கடைத்தேறுதல் நடவாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.