Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
திருவள்ளுவர் நாயனார் - நாத விந்து பெருமை “
திருவள்ளுவர் நாயனார் - நாத விந்து பெருமை “
தில்லையெனும் அம்பலமாம் கமல பீடம்
சிறந்நவிந்து நாதமதில் செனித்த வாறும்
வல்லவர்கள் போற்றும்திரு மண்ட பத்தில்
வழிகடந்து ஆறுதலம் தாண்டி அப்பால்
சொல்லரிய முக்கோண வீடும் தாண்டி
சோதிமதி நடுவணை முப்பாலும் தாண்டி
எல்லையெனும் மூலமதில் நாத விந்து
இன்பமுடன் உதித்தவகை இனிசொல் வேனே
விளக்கம் :
இருதயம் எனும் கமல பீடம் , அதில் நாத விந்து கலப்பு உளதாம்
அடையும் முறைமை எனில் ,
நாத மண்டபமாம் வாசி மேடை கடந்து , ஆறாதாரம் கடந்தும் , சோமசூரியாக்கினிகலைகள் கூடும் முச்சந்தி கடந்தும் , ஆன்ம ஜோதி அனுபவம் கடந்தும் , எல்லையாம்
சிற்றம்பலத்தே நாத விந்து கலந்து நிற்கும் திருவடி விளங்கு வகை எப்படி உரைப்பேன் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.