Sunday, March 8, 2026

அன்பர் சந்தேகம் – என் அனுபவம் - சிவவாக்கியர்

அன்பர் சந்தேகம் – என் அனுபவம் சிவவாக்கியர் பாடல் : காய கல்பம் & காயசித்தி சிவாயம் என்னும் அட்சரம் சிவம் இருக்கும் அட்சரம் உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் அற்ற வாயிலை கடந்து போன வாயுவை உபாயமிட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே இந்தப் பாடலில் கபாடம் அற்ற வாயிலை கடந்து போன வாயுவை உபாயமிட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே என்றால் பஞ்ச இந்திரிய சத்திகள் ஐந்தும் பிரணவத்தில் சேர்க்கும் வகை – வழி அறிந்தவர்க்கு – அவர்கள் இது நாள் வரை செலவழித்த பிராணனை , அந்த பஞ்ச இந்திரிய சத்திகளும் திரும்ப அழைத்து விடுமாம் ( called ” Reverse Ageing ” in english ) அதனால் அவர்கள் இளமையை திரும்ப அடைந்து விடுவார்கள் என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார் சிவவாக்கியர். ஆக , பஞ்ச இந்திரிய சத்திகள் ஐந்தையும் பிரணவத்தில் சேர்க்கும் வழி வகை அறிவதே காய கல்ப – காய சித்திக்கு வழி என்றுரைக்கின்றார் சிவவாக்கியர். உண்மை சம்பவம் – கோவை இந்த பதிவை படித்துவிட்டு ஒருவர் , இதை நான் எப்படி நம்புவது ?? ஆர் இருக்கார் இந்த அனுபவத்தில் ?? காட்ட முடியுமா ?? என்றார் நான் : கோவை என் வீட்டுக்கு வரவும் நான் காட்டுகிறேன் – என் பாதம் எவ்வளவு மென்மை அடைந்திருக்கு மேலும் சில பாகங்களும் மென்மை அடைந்து வருது இது தான் கண் கூடான சாட்சி ஆதாரம் நான் செயும் திருவடி தவம் தான் சாட்சி அவர் : ஓ அப்படியா ?? நான் பார்க்கிறேன் அவர் பின் வாங்குவது தெரிந்தது இது தான் உலகம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.